கருணாநிதி (கவிதை)


கருணாநிதி
—————-
ஒரு நூற்றாண்டை 
தனதாக்கிய சரித்திரம்!
ஓய்வெடுக்க கூறியதால்
ஓய்ந்துபோன சூறாவளி!

ஆறடிக்குள் அடங்கிப்போன
அரண்மனை ஆண்ட அரசன்!
நான்கு பேருக்கே தூக்கச் சொந்தமான
நூறுகோடிக்குச் சொந்தமான உடல்!

இலக்கியத்தின் பிறப்பிடம்
இரங்கல்உரை கேட்கும் தருனம்!
தமிழ்தாயின் இறப்பால்
மேற்கிலே தங்கிவிட்டது சூரியன்!

ஒடுக்கப்பட்ட முஸ்லீம்களை
முன்வரிசையில் அழுகுபார்த்த மானிடம்!
சிதைக்கப்பட்ட திராவிடத்தை
சிற்பமாக செதுக்கிய கலைஞன்!

அடுத்த தலமுறைக்கும் ஒலிக்கும்
“முரசொலி”எழுத்தால் ஆரம்பித்து
இன்றைய தலைமுறைக்கும் 
சரித்திரமான சமூகப்புரட்சி

**கிண்ணி*****
FAHMY MBM Mohideen-UK

கலைஞர் -அரசியல்வாதியாகவும்,இலக்கியவாதியாகவும்.போராட்டக்காரனாகவும் ஒரேநேரத்தில் இருந்தமைக்கு 3 காரணங்கள் முக்கியமானவை

1-அவரின் 75 வருடகால எழுத்துக்கள்.சாகும்வரை காலை 6:00-7:30மணிவரை எழுதுவதும்/படிப்பதுமாக இருந்தார்.*முரசொலி••அவரது சொந்தப்படைப்பு

2-அதிகாலையில் எழுந்துவிடுவார்.ஏதாவது குடும்ப உறுப்பினருடன் சில நிமிடங்களை ஒவ்வொரு நாளும் செலவு செய்வார்

3-கலைஞன் மக்களின் மனங்களில் வாழ்ந்தால் அவனுக்கு மரணம் இல்லை.ஆதலால் அரசியல்வாதியாக இல்லாமல் கலைஞனாக தன்னைப் பார்க்க வேண்டுமென அடிக்கடி வலியுறுத்தியவர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -