25 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் மருதமுனை நஜீம் ஆசிரியர்.


பி.எம்.எம்.ஏ.காதர்-
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு வாழும்போதே சிலர் உதாரணமாகின்றனர். அவ்வாறான சாதனையாளர்களில் ஒருவர்தான் மருதமுனையைச் சேர்ந்த'நஜீம் ஆசிரியர்;'என்ற எஸ்.எம்.எம்.அபூபக்கர்.இவர் 2018-03-13ஆம் திகதியுடன் தனது 25 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
மருதமுனை கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சாதனையாளராக இவர் திகழ்கின்றார்.எட்டாக்கனியாகத்; தட்டிவிடப்பட்ட கல்வியைத் தன் சொந்த முயற்சியால் கற்று 1990ஆம் ஆண்டு வெளிவாரிப் பட்டதாரியாக பட்டம் பெற்று 1993-01-13ஆம் திகதி பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றார்.

முதல் ஆசிரியர் நியமனத்துடன் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தனது கடமையைப் பொறுப்பெற்று அதன் பின்னர் கல்முனை அல்-மிஸ்பாஹ் வித்தியாலயம்,வீரத்திடல் அல்-ஹிதாயா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் 2004-01-01ஆம் திகதி மீண்டும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலேயே தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்து ஓய்வு பெறும் வரை அப்பாடசாலையிலேயே அவர் கடமையாற்றினார்.
'அரசியல்' பாட ஆசிரியர் என்றால் அது நஜீம் ஆசிரியர்தான் அரசியல் பாடம் இவரின் கைவந்த கலையாயினும் வரலாறு,புவியியல்,குடியுரிமைக் கல்வி மாத்திரமன்றி பொருளியல் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பிக்கும் ஆற்றல் கொண்டவர் நஜீம் ஆசிரியர்.
நஜீம் ஆசிரியரின் அறிவாற்றலும்,அன்பும் அவரின் பக்கம் மாணவர்களை ஈர்க்கச் செய்தமை குறிப்பிடக்கூடிய விடையமாகும்.இதன் காரணமாக பல மாணவர்கள் சிறந்த கல்விப் பெறுபேறுகளை அறுவடைசெய்ய இவரின் கற்பித்தல் காரணமாயிற்று எனலாம்.
மருதமுனையிலும் அம்பாறை மாவட்டத்தின் நாலாபுறங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்த மாணவர்களை இனங்கண்டு வீடுவீடாகச் சென்று கற்பித்து பல பட்டதாரிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.எந்த மாணவரைக் கண்டாலும் அருகில் அழைத்து ஆலோசனை வழங்கத் தவறுவதில்லை.

1958-03-13ஆம் திகதி பிறந்த இவர் சிறுவயதிலேயே குடும்பச்சுமை தலையில் ஏறியதன் காரணமாக தனது இளமைக்கால விளையாட்டு கல்வி இன்னோரன்ன தேவைகள் அனைத்தையும் இழந்து தவித்தார் இருந்த போதும் தனது விடாமுயற்சியின் காரணமாக கல்வியைக் கற்று ஒரு பட்டதாரியகி சமூக அந்தஸ்த்தைப் பெற்றார்.

வாழ்க்கையில் தான் கால்வைத்த ஒவ்வொரு படிகளிலும் இருந்த இடர்களை தனியொருவனாய் நின்று கல்வியால் உடைத்தெறிந்து ஊரில் தன்பெயரையும் தடம் பதித்தார்.பாடசாலைகள்,பள்ளிவாசல்கள்,மத்ரஸாக்கள் பொது நிறுவனங்கள் மட்டுமன்றி ஏழை மாணவர்களுக்கும் தனிப்பட்ட பலருக்கும் பொருளாதார ரீதியாக உதவி வருகின்றார்.
அது மாத்திரமன்றி துபாயில் வசிக்கும் தன் தங்கை கபீழாவினாலும் வலது குறைந்தோருக்காகவும், விதவைகள், வாழ்வாதாரமற்ற ஏழைகள் என்று யாரும் அறியாத வகையில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கும் இவரை மருதமுனை சமூகம் என்றைக்கும் மறக்கமுடியாது.
ஓவ்வொரு வருடமும் க.பொ.த சாதாரண தரம்,உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்னற மாணவர்களுக்கு பணப்பரிசில்களை வழங்கி ஊக்குவித்து வருகின்றார்.

இவர் மருதமுனையைச் சேர்ந்த சீனி முஹம்மது,அவ்வா உம்மா தம்பதியின் நான்காவது பிள்ளையாவார்.இவர் தன் சேவைக்காலம் ஓய்விற்குச் சென்றாலும் அவரின் சேவை என்றும் ஓய்விற்குச் செல்லாது.சோதனையிலும் சாதனை படைத்த எஸ்.எம்.எம்.அபூபக்கர் நஜீம் ஆசிரியரை பாடசாலைச் சமூகம் மட்டுமன்றி மருதமுனை மண்ணும் மக்களும் மனதாற வாழ்த்துகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -