சுதந்திரத்திற்காய் போராடிய மருதமுனை அனீஸ் லெப்பையின் வரலாற்று நூல் வெளியீட்டு வைப்பு

பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்திற்காய் போராடி உயிர்நீத்த மருதமுனையைச் சேர்ந்த அனீஸ் லெப்பையின் வரலாறு அடங்கிய நூல் கடந்த சனிக்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் அல் - ஹாஜ் சாஹுல் ஹமீது ஷாஜஹான் ஜே.பி. எழுதிய மேற்படி ‘மருதமுனை மகன் அனீஸ் லெப்பையின் வரலாறு’ என்ற இந்த நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நூலாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, முன்னாள் உயர் கல்வி பிரதியைமமைச்சர் அல் -ஹாஜ் மையோன் முஸ்தபா சிறப்பதிதியாக கலந்து கொhண்டார். மேலும், மன்னார் உயர் நீதிமன்ற நீதிபதி மனாப், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்திற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடிய கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் ஏழு பேர் உள்ளிட்ட 189 பேரை தேசத்துரோகிகளாக 1804ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு பிரகடனப்படுத்தியிருந்தது. இந்த வர்த்தமானி பிரகடனத்தை நீக்க இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த காலங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளை மையமாக வைத்து மேற்படி ‘மருதமுனை மகன் அனீஸ் லெப்பையின் வரலாறு’ என்ற நூல் எழுதப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -