112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் 112 ஆவது" உதா கம்மண்ண" வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
புல்மோட்டை 13 ம் கட்டையில் அமைக்கப்பட்ட றசூல் நகர் கிராமத்திற்கான
30 வீடுகளைக்கொண்ட வீடமைப்புத் திட்டம் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருன சிரிசேன, குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -