வவுனியா நகரில் காணப்படும் மரக்கறி சந்தையில் 18 பேர் வரை மரக்கரி வியாபாரம் செய்து வருகின்றனர். குறித்த கட்டிடத் தொகுதியை உடைத்து புதிய சந்தைத்தொகுதி ஒன்றை 2.5 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைப்பதற்கு வவுனியா நகரசபை தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பில் வவுனியா நகரசபையினால் குறித்த வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இவ் புதிய மரக்கறி சந்தை அமைப்பதற்கு ஆறு மாத காலம் தேவை என்பதனால் அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக இவ்வியாபாரிகளிற்கு புதியதொரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதும் இவ்விடத்தில் வியாபாரிகளே கொட்டகைகளை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அக் கொட்டகைகளை அமைப்பதற்கு தம்மிடம் போதுமான வசதிகள் இல்லாமையினால் நகரசபை கொட்டகைகளை அமைத்து தரும் பட்சத்தில் தாம் அவ்விடத்திற்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட முடியும் என தெரிவித்து வந்தனர். அத்துடன் குறித்த சந்தைக்கான மின்சாரத்தினையும் நகரசபை துண்டித்துள்ளமையினால் வியாபரிகள் இரவு நேரங்களில் வியாபாரத்தில் ஈடுபடுவதிலும் சிக்கல் நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் இவ்வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளான நிலையில். மீள் குடியேற்ற.புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் குறித்த சந்தை தொகுதிக்கு தானே நேரடியாக வந்து வியபாரிகளின் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
இதனையடுத்து பிரதி அமைச்சர் நகரசபை தலைவரோடு தொலைபேசியில் கலந்துரையாடியிருந்ததோடு இதற்கு சுமூகமான முறையினை தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும்கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து பிரதி அமைச்சர் நகரசபை தலைவரோடு தொலைபேசியில் கலந்துரையாடியிருந்ததோடு இதற்கு சுமூகமான முறையினை தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும்கோரிக்கை விடுத்திருந்தார்.