அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கலாவெவ தேசிய பூங்காவில் கல்கொடவல பிரதேசத்தில் உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, சடலம் மீட்கப்பட்டுள்ள இடம் யானைகள் நடமாடும் பகுதியென தெரிவித்துள்ளது.
இவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய கல்கிரியாகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட என்பதுடன், அவர் யார் இதுவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .