காட்டுக்குள் அநாயாசமாக அடியார்கள். நாளையுடன் காட்டுப்பாதை மூடப்படும்!

காரைதீவு நிருபர் சகா-
திர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை(22) ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்படுமென்று அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.
கடந்த 4ஆம் திகதி இக்காட்டுப்பாதை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் இப்பாதையால் பயணித்துள்ளனர்.
ஒரேயோருவர் இடைநடுவில் மரணித்துள்ளார்.ஏனையோர் காட்டு மிருகங்களின் எவ்வித தாக்கமும் இல்லாமல் கந்தனருளால் கதிர்காமம் போய்ச்சேர்ந்துள்ளனர்.
இம்முறை 10 இஸ்லாமியசகோதரர்களும் உருத்திராக்கமணிந்து மரக்கறி புசித்து சைவமுறைப்படி இக்காட்டுப்பாதையால் பயணித்துள்ளனர்.

கதிர்காம தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருப்பதால் இறுதியாக காட்டினூடாக பயணிக்கும் திகதி நாளை(22)யுடன் நிறைவடைகின்றது.
இறுதித்தறுவாயில் சென்ற யாத்திரீகர்கள் குமுக்கன் மற்றும் உப்பாற்றைக்கடந்து வியாழையில் சந்தோசமாகச் சமைத்துண்டு இளைப்பாறிச் செல்வதை காணக்கூடியதாயிருந்தது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -