முதலாவது ஆய்வரங்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை, அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அரங்கில், "இலங்கை முஸ்லிம் தேசியத்தின் தந்தை அறிஞர் சித்தி லெப்பை" எனும் மகுடத்தில், பேராசிரியர்களான எம்.எஸ்.எம். அனஸ், ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெறும்.
இரண்டாவது ஆய்வரங்கு முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அரங்கில், "நவ காலனித்துவ யுகத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்" எனும் தலைப்பில், பேராசிரியர் சோ. சந்திர சேகரம், கலாநிதி பீ.ஏ. ஹுஸைன்மியா ஆகியோர்களது இணைத் தலைமையில் இடம்பெறும்.
தேசிய ஆய்வு மாநாடு நிகழ்வுகள், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை, அறிஞர் சித்தி லெப்பை அரங்கில் நிகழும்.
வரவேற்புரையை - ஆய்வுப் பேரவையின் பொதுச் செயலாளர் பொறியியலாளர் நியாஸ் ஏ. ஸமத், தலைமையுரையை - பேரவையின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மெளலானா, தொடக்கவுரையை - சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் டாக்டர் அஹமது ரிஷி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தீன் முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தவிருப்பதோடு, பேராசிரியர்களான எம்.ஏ. நுஃமான், சேமுமு முஹமதலி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றவுள்ளனர். பேரவையின் உப தலைவர் "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மாநாட்டின் பிரகடனத்தை அறிமுகம் செய்து வைப்பார்.