ஆட்சிக்காக உரிமையை தாரைவார்த்த பிரதியமைச்சர் அமீர் அலி : உரிமைக்காக சபையை இழந்த றியாழ்!


அபூ சம்ரி-
டந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையில் றியாழின் வழிகாட்டுதலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக்குழுவில் ஒட்டகச்சின்னத்தில் போட்டியிட்ட அணி அதிக ஆசனம் பெற்று வெற்றியீட்டியது.
ஆனால், ஆட்சிமைப்பதற்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்கள் தேவைப்பட்டன. அந்த அடிப்படையில் சுதந்திரக்கட்சி கல்குடா அமைப்பாளர் ஹாறூன் மௌலவியிடம் பேசி, அவரும் ஆதரவு தருவதாக வாக்குறுதி வழங்கிய பின்னர் இன்னுமோரு ஆசனமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனத்தைப் பெறுவதற்கான நகர்வுகள் மேல் மட்டங்களில் பேசப்பட்டு, உறுதி மொழிகளும் வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கல்குடாத்தொகுதிக்குப் பொறுப்பாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இதற்கு உடன்படவில்லை.

பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் அண்மைக்காலமாக ஏற்படுத்திக்கொண்ட நெருக்கமும், தமிழர், முஸ்லிங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளில் தமிழர் தரப்பிற்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவும் அல்லது அவ்வாறான பிரச்சனைகளில் பிரதியமைச்சர் தலையிடாமலிருக்கவும் யோகேஸ்வரன் எம்.பி க்கு பிரதியமைச்சரின் ஆதரவைத் தொடர வேண்டிய தேவை இருந்தது. அதே போல, எதிர்கால பாராளுமன்றத்தேர்தல், ஓட்டமாவடி பிரதேச சபை ஆட்சி என்பவற்றுக்கு யோகேஸ்வரன் எம்.பி யின் ஆதரவு இவருக்குத் தேவைப்பட்டது.

கல்குடாத்தொகுதி அமைப்பாளர் றியாழ் அவர்கள் மீது யோகேஸ்வரனுக்கு கோபமிருந்தது. எவ்வாறென்றால், வாழைச்சேனை ஆட்டோ சங்கப்பிரச்சனையில் யோகேஸ்வரன் எம்.பி யின் இனவாதச் செயற்பாடுகளைக்கண்டித்து றியாழ் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக்கடிதம் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது.

அத்தோடு, மாஞ்சோலை எல்லைப் பிரச்சனைகளின் போது பிரதியமைச்சர் தமிழ் தரப்பிற்கு சார்பான செயற்பாடுகளை யோகேஸ்வரன் எம்.பி யுடன் இணைந்து முன்னெடுத்த போது, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வழக்கிட்டு தீர்வைப்பெற அமைப்பாளர் றியாழ் அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.

அது மாத்திரமில்லை. வாகனேரிக்குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக நமது மீனவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய தமிழ் தரப்பின் உறுப்பினராகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு பட்டியலூடாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் கிருபை ராசா இருந்தார். இதன் காரணமாக, பிரதியமைச்சர் பாதிக்கப்பட்ட நம் மீனவர்கள் தொடர்பில் எவ்வித கவனமும் எடுக்காது, மற்றைய தரப்பிற்கு சார்பாகவே தனது நடவடிக்கைகளை எடுத்திருந்தார். ஆனால், றியாழ் அவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முன்னின்று உதவி செய்தார்.
இவ்வாறான காரணங்களால் தமிழர் தரப்பிற்கு குறிப்பாக யோகேஸ்வரன் எம்.பி க்கு பிரதியமைச்சர் அமீர் அலிக்கு ஆதரவு வழங்குவதே சாதகமென்று முடிவை எடுத்தார்கள். தங்களுக்கு வாழைச்சேனை பிரதேச சபையை இழக்க வேண்டி வந்தாலும், தங்களோடு ஒத்தியெங்காத் தவறிய றியாழோடு சேர்வதில்லை என்றும், ஆதரவை பிரதியமைச்சருக்கு வழங்குவதனூடாக முஸ்லிம்களின் உரிமை சம்பந்தமான கோசங்களில் கட்டுப்பாடுகளை தங்களுக்குச் சாதகமாக செய்து கொள்ளலாம் என்ற முடிவில் பிரதியமைச்சர் அமீர் அலி சார்பான அணிக்கு ஆதரவு கிடைத்தது.
தன் சமூகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காததால், றியாழ் சபையை இழந்தார். தன் சமூகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்து ஓட்டமாவடி பிரதேச சபையில் பிரதியமைச்சர் ஆட்சியமைத்தார்.

இன்று நடப்பது என்ன???
மீன் பிடி அமைச்சை தன்னகத்தே கொண்டுள்ள பிரதியமைச்சர் எம்மவர்களின் வாகனேரிக் குளத்தில் மீன்பிடிக்கும் உரிமையை வென்று கொடுப்பாரா? ஆட்சிபீடமேறியிருக்கும் சபை இழந்த ஐந்து கிரம சேவகர் பிரிவுகளையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமா?

தாங்கள் அதிகாரத்தைப்பெற சமூகத்தை அடகுவைத்தவர் எங்கே? தாங்கள் அதிகாரம் இழந்தாலும் வெற்றி பெறுபவர் ஒரு முஸ்லிம் தான். இதற்காக சமூகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என செயற்பட்ட றியாழ் எங்கே?
நேர்மை ஒரு நாள் மாலை சூடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -