பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்


அகமட் எஸ். முகைடீன்-
ரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தி மற்றும் கல்முனை மாநகர பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி Nவைலத்திட்டங்கள் தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (2) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வாலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம். நபீல், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம். றகீப், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்டடத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை பொதுச் சந்தை வர்த்தக பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தியினை துரிதப்படுத்தும்வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்டட துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் கொழும்பில் கூட்டமொன்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கமைவாகவே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தி உள்ளிட்ட கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, மருதமுனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -