கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மூத்த முதுசங்களுக்கு பாராட்டு விழா!


கலீல் எஸ் முஹம்மட்-
ல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற மூத்த மாணவ முதுசங்களைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் அக்கல்லூரியின் அபிவிருத்தி குழு, ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலையின் கல்விச் சமூகம் என்பன ஒன்றிணைந்து நடாத்த தீர்மானித்துள்ளது.

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இளைய சந்ததியினரிடையே மூத்தோரை மதிக்கும் பண்புகளை வளர்த்தல், பெரியோர் இளையோர் தொடர்புகளை அபிவிருத்தி செய்தல், அனுபவங்களைப் பகிர்தல், நற்பண்புகளை பரிமாற்றல் ஆகிய நோக்கங்களை மையமாககொண்டு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் வாரத்தினை அதற்காகப் பிரகடனம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துனையாடல் கல்லூரியின் அதிபர் எம். எஸ் முஹம்மட் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளபட்டது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் ஸாஹிராவில் கல்வி கற்று தற்போது 60 வயதை அடைந்தவர்கள் அதாவது கல்லூரியின் ஆரம்ப வருடமான 1949 தொடக்கம் 1970 வரையான காலப்பகுதியில் தங்களது மாணவர் அனுமதி சுட்டெண்ணினைக் கொண்ட சாஹிராவின் அனைத்து பழைய மாணவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இவ்விழாவில் பங்கு பற்றுவோர் தமது பாடசாலை நண்பர்களுடன் அளவளாவுவதற்கும் அனுபவங்களைப் பகிர்வதற்கும் தமது பாடசாலை மற்றும் சமூகத்திற்கு உதவி ஓத்தாசை செய்வதற்கும் புதியதோர் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
அத்துடன் மேலதிக நிகழ்வுகளாக முதியோரை மதித்தல் தொடர்பாக மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளும் முதியோருக்கான மருத்தவ முகாமும் நடாத்தப்படவுள்ளன.

பங்குபற்றுனருக்கு நினைவுச்சின்னமும் பரிசுப் பொருளும் வழங்கப்படுவதோடு நினைவு மலரும் வெளியிடப்படும்.
சாகிரா கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வைத்திருப்போர் அவற்றின் பிரதியொன்றைத் தந்துதவுமாறு ஏற்பாட்டுக்குழு பொது மக்களை வேண்டுகின்றது.

இதற்காக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை கல்லூரியின் அதிபர் மூலமாக பெற்றுக்கொள்வதோடு இது தொடர்பான மேலதிக தகவல்களை ஏற்பாட்டுகுழு சார்பாக டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் (தொ.பேசி இல 0773 725625) முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் (தொ.பேசி இலக்கம் 0777113466) ஆகியோரைத் தொடர்புகொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -