பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு உதுமான் கண்டு நாபீர் எழுதும் பகிரங்க திறந்த மடல்..


நாபீர் பெளண்டேசனின் ஊடக பிரிவு…
ந்த நல்லாட்சி அரசாங்கம் கரையோர பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை கெளரவப்படுதும் முகமாக தங்களுக்கு வழங்கப்பட்ட மீன் பிடி நீரியல்வள பிரதி அமைச்சினை வைத்துக்கொண்டு மீனவர் சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை ( குறிப்பாக வாழைச்சேனை மீனவர் சமூகம், கல்முனை சாய்ந்தமருது, ஒலுவில், பாலமுனை, அதே போன்று பொத்துவில் மற்றும் ஏனைய கரையோர பிரதேசங்களில் வாழும் மீனவ சமூகம்கள் எதிர் நோக்குகின்ற அத்தியவசிய பிரச்சனைகளை) இனம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டுமே தவிர தன்னுடைய அமைச்சினை வைத்துக்கொண்டு மாற்று கட்சி காரர்களை தன் பக்கம் எடுத்துக்கொள்வதற்காக வேண்டி பொய்யான வாக்குறுதிகளையும், நப்பாசைகளையும் காட்டி அவர்களை தங்கள் பக்கம் சாய்த்துகொள்ள முடியும் என்ற நினைப்பினை தவிர்த்து உங்களோடு அன்று முதல் இன்று வரை அரசியலில் கைகோர்த்த போரலிகளை திருப்திப்படுத்த நீங்கள் முன்வர வேண்டும்.
முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற புல்லுருவிகள் சிலர் அன்மையில் தங்களுடன் இணைந்துள்ளதனை ஊடகங்களுக்கு பெரிது படுத்தி காட்டிக்கொண்டும், சமூக வலைத்தங்களில் தங்களுக்கு சாதகமாக எழுதுபவர்களை வைத்துக்கொண்டு அவ்வாறான புல்லுருவிகள் முஸ்லிம் காங்கிரசினுடைய தீவிர போராலிகள் என சமூகத்தினை நம்பவைக்க முற்படுவதானது உங்களுடைய வங்குறோத்து அரசியலினை வெளிச்சம் போட்டு காட்ட கூடியதாக அமைந்துள்ளது.
இவ்வாறான அடிமட்ட அரசியல் செய்வதனூடாக முஸ்லிம் காங்கிரசில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்துகொண்டு எதிரே வருகின்ற மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்து விடலாம் என பகற்கனவு காணாதீர்கள். நீங்கள் உண்மையான அரசியல் ஜாம்பவான் என்றால்.? முதலில் இவ்வாறான வங்குறோத்து அரசியல் செய்வதனையும், உண்மைக்கு புறம்பான முறையில் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைக்கு சேறு பூசுகின்ற நாடகத்தினையும் கைவிட்டு நியாயமான அரசியலினை கல்குடாவிலும், அதனை அண்டிய கிழக்கு மாகாண மாவட்டங்களிலும் செய்து காட்டுவதற்கு முன்வர வேண்டும்.

கிழக்கிலங்கையில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதம் உச்ச கட்டத்தில் இருந்த காலப்பகுதியில் வாழைச்சேனை மக்கள் முஸ்லிம் காங்கிரசிற்காக தங்களது உயிர்களை துச்சமாக மதித்து முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு விசுவாசமாகவுன் செயற்பட்டு கட்சியினை கல்குடாவில் வளர்த்து காட்டியவர்கள். முஸ்லிம் காங்கிரசினுடைய தைரியமிக்க உண்மையான போரலிகளில் அதிகமானவர்களை இன்றும் வாழைச்சேனையில் காணக்கூடியதாகவே இருக்கின்றது. வாழைச்சேனை மக்கள் பணத்திற்காகவும், நீங்கள் போடுகின்ற எலும்புத்துண்டுகளுக்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கத்தினை காடிக்கொடுத்து விட்டு உங்களுடன் சேர்ந்து நாடகம் ஆடுகின்ற போரலிகள் என நீங்கள் தப்புக்கணக்கு போடாதீர்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் இனம் காணப்பட்ட புத்தி ஜிவிகள், கல்வி மான்கள், பணத்திற்கு எக்காலமும் சோரம் போகாத போரலிகள், பலதரப்பட்ட சமூக சேவையாளர்களை கொண்ட பிரதேம்தான் வாழைச்சேனை பிரதேசமாகும். பல தசாப்தங்களாக கேட்பார் பாற்பார் அற்று காணப்பட்ட வாழைச்சேனை ஹைராத் வீதி புணரமைப்பு, கல்குடாவிற்காக தூய குடி நீர் திட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளை முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைமையானது கல்குடாவிற்கான அமைப்பாளர் றியால் மூலம் இனம் கண்டு அதற்கான தீர்வினை வழங்க ஆரம்பித்துள்ளதனை உங்களால் சகித்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. இதற்கு எதிராக எவ்வாறான சதி திட்டங்களையும் நீங்கள் வாழைச்சேனையில் அரங்கேற்றுவதற்கு பயப்பட மாட்டீர்கள் என்பதனை வாழைச்சேனை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே வாழைச்சேனை எப்பொழுதும் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவே இருக்கும் என்பதனை நீங்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கு கடந்த காலங்களில் கிடைத்த அதிகாரங்களை வைத்துக்கொண்டு வாழைச்சேனை மக்களுக்காக எதனை செய்துள்ளீர்கள் என உங்களின் உள்ளத்தில் கைவைத்து கேட்டுப்பாருங்கள். வாழைச்சேனையில் எத்தனை இளைஞர்களுக்கு நீங்கள் வேலை வாய்ப்பினை கொடுத்துள்ளீர்கள்.? வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை கிடைக்க வேண்டும் என உண்மையாகவே நீங்கள் இஹ்லாசுடன் முயற்சி செய்திருக்கின்றீர்களா.? வாழைச்சேனை மீனவ சமூகம் நிம்மதியாக தங்களுடைய தொழிலினை மேற்கொள்வதற்கு உங்களுக்கு கிடைத்த அதிகாரங்களை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி உள்ளீர்களா.?

எனவே கல்குடா சமூகம் உங்களுக்கு தந்துள்ள அரசியல் அதிகாரத்தினை வைத்துகொண்டு இன்னும் வாழைச்சேனை மக்களை மடையர்களாக்கலாம் என்ற உங்களுடைய அரசியல் நாடகத்தினை நிறுத்தி கொள்ளுங்கள். உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போரலிகளுக்கு மத்தியில் நாசுக்கான முறையில் பிளவினை ஏற்படுத்தும் உங்கள் சதிவேலைகளை முதலில் கைவிட்டு அரசியலில் 15 வருடம் முதிர்ச்சி பெற்றுள்ள நீங்கள் வாழ்க்கையின் கடைசி நேரத்தில்லாவது மனச்சாட்சிக்கு பயந்தவராக மக்கள் உங்களுக்கு தந்துள்ள அமானிதத்தினை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளும் வகையில் வாழைச்சேனை மக்களுக்கும், கல்குடா பிரதேசத்திற்கும் செயற்படுத்துமாறு இந்த புனித ரமழான் மாத்தில் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்………. இப்படிக்கு நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -