தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இன்று வெள்ளிக்கிமை காலை(08-06-2018)பாரளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்கின்றார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிப்பட்டியல் உறுப்பினராகவே இவர் பாராளுமன்றம் செல்கின்றார்.
ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வழங்கியிருந்து தேசியப் பட்டியலில் மூலம் பாராளுமன்றம் சென்ற சட்டத்தரணி எம்.எச்.எம்.நவவி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்;பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்,வர்த்தகக் கைத்தொழில் அமைச்சருமான றிசாட்; பதியுதீன் இவரை நியமித்துள்ளார்.
கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் பற்றிய குறிப்புக்கள்; பின்வருமாறு அமைந்துள்ளது.
ஒரு முழுமைபெற்ற புத்தகமமானது முகவுரை முதல் முடிவுரை வரை மட்டுமன்றி மறைமுகமாக விமர்சனம் என்ற ஒரு அத்தியாயத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது போன்று தான் சில சாதனையாளர்களின் வரலாற்றுப் பார்வை அத்தியாயத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையான பக்கங்களை மட்டுமன்றி தியாகம், சேவை, வளர்ச்சி, வீழ்ச்சி என ஏராளமான பல்வேறு பக்கங்களையும் கொண்டிருக்கும். இப்படியான மனிதர்களைப்; பற்றியதாக வரலாறுகள் இன்று, ஒரு பக்கம் மறைக்கப்பட்டும், இன்னொரு பக்கம் தொகுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்கள் வாழும் போது அவர்களது ஒவ்வொரு அடியும் நமக்கு சம்பவங்களாக இருக்கும். இறந்த பின் தான் நம் கண்கள் அவை வெறும் சம்பவங்களல்ல என்று உண்மைக் கண்களைத் திறந்து கொள்ளும். இப்படிப்பட்ட ஒரு வரலாற்று மனிதனின் வரலாறு அழிந்து விடக் கூடாதென்ற பேரவாவில் இக்கட்டுரை எழுத வைத்திருக்கின்றது எனலாம். களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலைகளாகவும், தென்னந்தோப்புகளாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பைக் கண்டு ஒரு நாள் கனவு கண்ட ஒரு மைந்தனின் கனவை நனவாக்குவதில் பல தியாகங்களைச் செய்த ஒர் மனிதனைப் பற்றிய தடங்கள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இத்தகவல்; இருக்கலாம்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிற்பி என போற்றப்படும் சம்மாந்துறை மண்ணின் மைந்தன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின்; வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டு முன், ஒரு தியாகச் செம்மலை ஈன்றெடுத்த தென்கிழக்கின் பெரும் சொத்தைப்பற்றி நாம் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அயராத முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் பல்கலைக்கழக கல்லூரியாக அப்போதைய உயர்கல்வி உயர்கல்வி அமைச்சர்; ரிச்சட் பத்திரன அவர்களால் 1995 ஆண்டு ஒக்டோபர் 23 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்காலத்தில் நிலவிய அமைதியற்ற யுத்தச்சூழல்; காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 39 மாணவர்கள் முதலில் இங்கே உயர்கல்வி பெற அனுமதி பெற்றனர். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதிக் கட்டிடத்தில் தற்காலிகமாக இப்பல்கலைக்கழக கல்லூரி தனது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் 1996ஆம்; ஆண்டு மே மாதம் 15ஆம்; திகதி இப்பல்கலைக்கழகக்கல்லூரி இலங்கையின் 10வது தேசிய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டமை ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வாக மட்டுமன்றி தலைவர் அஷ்ரபின் கனவுகளின் பாதி வெற்றியாகும். இது தென்கிழக்குப் பிராந்திய மக்களின் கல்வி மறுமலர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயம் எனவும் வர்ணிக்கலாம்.
1962ஆம்; ஆண்டு பெப்ரவரி 17ஆம்; திகதி முஹம்மது தம்பி போடி ஸீனி முஹம்மது மற்றும் ஸீனி முஹம்மது கதீஜா உம்மா ஆகியோரின் மகனாக இவ் அவனியில் பிறந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயீல், சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்டு தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்தில் கற்றார். இரண்டாம் தர கல்வியை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று சித்தியடைந்த இவர் 1982 ம் ஆண்டு ரஷ்யாவின் டோனெஸ்க் பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் மூலம் தேர்வாகி தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். பிறகு 1988 ம் ஆண்டு நிதி மற்றும் பொருளாதாரத் துறையில் (குiயெnஉந யனெ ஊசநனவைஃ நுஉழழெஅiஉள) உக்ரைனின் னுழநௌவம மாநிலத்தில் உள்ள னுழநௌவம ளுவயவந பல்கலைக்கழகத்தில் தனது ஆ.ளுஉ கற்கையை முடித்த இவர் இதே துறையில் 1992 ல் உக்ரைனின் உள்ள முநைஎ பல்கலைக்கழகத்தில் (முநைஎ ருniஎநசளவைல ழக யேவழையெட நுஉழழெஅல- சுநஎளைநன யள ஏயனலயஅ ர்நவஅயn முலiஎ யேவழையெட நுஉழழெஅiஉ ருniஎநசளவைல- முநைஎஇ ருமசயiநெ) தனது கலாநிதி கற்கையை (Ph.னு) பூர்த்தி செய்தார். 2006ம் ஆண்டு ஜக்கிய இராச்சியத்தின் டீசயனகழசன இல் அமைந்துள்ள டீசயனகழசன பல்கலைக்கழகத்தில் சமாதனமும் அபிவிருத்தியும் எனும் துறையில் (ஊழகெடiஉவ சுநளழடரவழைn யனெ Pநயஉந Pசநியசநனநௌள) பட்டப்பின் படிப்பை முடித்தார்.
ஒரு இலங்கை மகானின் கனவின் பிரதிபலிப்பு தான் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் களியோடைப் பகுதிக்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை ஹெலியில் வட்டமடித்த வண்ணம் பார்வையிட்ட எம்.எச்.எம். அஷ்ரப் இங்கு ஒரு பல்கலைக்கழகம் போலவும், இந்த கழியோடை ஆறு கேம்பிரிட்ஜிற்கு அருகிலுள்ள நதி போலவும் இருக்கும் என்று கற்பனை செய்கின்றேன் என்று தன்னுடன் வந்தவர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்திலும் அதீத கற்பனையிலும் ஆழ்த்தியது. கிழக்கில் யுத்த மேகம் சூழ்;ந்திருந்த ஒரு காலப்பகுதியில் அன்றாட வாழ்க்கையைக் கூட நடாத்துவது சிரமமான ஒரு சூழலில்; ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எந்த அடிப்படை வளங்களும் அற்ற தென்னை மரச்சோலைகளும் சிதைவடைந்த நெற்களஞ்சியங்களும் நிரம்மியிருந்த ஒரு காலப்பகுதியில் சர்வதேச தரத்துடனான அரச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவேன்' என்ற அஷ்ரபின் கனவு கலங்காமல் நனவாக்கினார். அக்கனவுகளின் புணர்நிர்மானம் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் கரங்களில் கருவானது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பரிணாம வளர்ச்சிப் போக்கில் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயீலின் காலம் பொற்காலமாகும். பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலையை உருவாக்குவதில் எவ்வாறு தியாகித்தாரோ அதற்கு அணுவும் குறைவின்றி அதன் பாதச்சுவட்டை முன்னோக்கி நகர்த்திச் சென்று முழு வீச்சுடன் தென்கிழக்குப் பல்கலையை தலைநிமிரச்செய்த பெருமை கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களையே சாரும்.
தென்கிழக்குப் பல்கலையின் முதுமானி விரிவுரையாளராக தரம் 1 ல் களம் பதித்த இவர் இரண்டு தடவைகள் சமூக விஞ்ஞான பீடத்தின் துறைதலைவராகவும், முகாமைத்துவம் மற்றும் பொருளியல் பீட பீடாதிபதியாகவும், தென்கிழக்குப் பல்கலையின் Pசழஉவழச ஆகவும், கடமை புரிந்தார். இதற்கிடையில் 2004 ம் ஆண்டு முதல் உலக வங்கியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இலங்கை கல்வித்திட்டத்தின் தரம் மேம்படுத்தல் திட்டத்தின் (ஐசுஞருநு Pசழதநஉவஇ குரனெநன டில வாந றுழசடன டீயமெ) பணிப்பாளராக இருந்தார். டீசயனகழசன பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளாக கடமையாற்றிய இவர் 2009 முதல் 2015ஆம்; ஆண்டு வரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக இரு தடவைகள் பதவி வகித்தார். இப்பல்கலைக்கழகத்தில் 1995 முதல் 2004 வரை 9 ஆண்டுகள் பேராசிரியர் எம்.எல்.எ.காதர் மற்றும் 2004 முதல் 2009 வரையும் கலாநிதி எ.ஜி.எச். இஸ்மாயீல் அவர்களும் உபவேந்தராக பதவியேற்றார். முதல் பதவிக்கால முடிவில் இரண்டாம் தடவையாகவும் ஜனாதிபதியால் உபவேந்தராக நியமிக்கப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இவர் தொடர்ந்தும் இரண்டு முறை பதவி வகித்தார்.
மேலும் இவர் பல்கலைக்கழக வழிகாட்டல் பிரிவின் தலைவராகவும், பல்கலைக்கழக நூலக அமைப்புடன் கூடிய செனட் சபை தலைவராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் தலைவராகவும், 2005ஃ2006 ம் கல்வியாண்டின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது மாணவர் பேரவையின் மூத்த பொருளாளராக பதவி வகித்தவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கலையின் நிதிக்குழுவில் அங்கத்தவராகவும் சேவையாற்றினார். 2008ம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான விடுதியமைக்கும் கட்டிட நிர்மாணத் திட்டத்தின் சோதனைக் குழுவில் உறுப்பினராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக இடைக்கால ஆய்வுக் குழுவின் உறுப்பினராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக இடைக்கால சமூகம் சுவைக்கச் செய்த எழுத்தாளனுமாவார்.
மேலும், இலங்கையின் பொருளாதார நிபுணர் சங்கத்தினதும், மக்கள் சனத்தொகை அமைப்பினதும், அறிவியல் முன்னேற்றத்திற்கான அமைப்பினதும் மற்றும் மதிப்பீட்டு அமைப்பினதும், (டுகைந அநஅடிநச ழக ளுசi டுயமெய யளளழஉயைவழைn ழக நஉழழெஅளைவஇ pழிரடயவழைnஇ யனஎயnஉநஅநவெ ழக ளஉநைnஉந யனெ நஎயடரயவழைn) ஆயுட்கால உறுப்பினராகவுள்ளார். இளைப்பாராது வருடாவருடம் பொறுப்புக்களில் பதில் சொன்ன ஒர் உன்னதமான ஒருவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்இழந்து நிற்கின்றது.
இப்பல்கலைக்கழகத்தில்; தொழுகைக்குரிய மஸ்ஜிதின் இடம் பற்றாக்குறை நிலவிய வேளையில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாமல் வெளிநாட்டவர்களின் நிதியுதவியைப் பெற்று ஒரு வியக்கத்தக்க அழகிய மஸ்ஜிதை இப்பல்கலைக்கழகத்திற்குப் பெற்றுக்கொடுத்தார். மூவினங்களையும் தடையின்றி பின்பற்றும் பல்கலைக்கழகத்தினை நாங்கள் உருவாக்குவோம் என உத்தரவாதப்படுத்தினர்.தழிழர்களுக்கு கோயிலும், பௌதர்களுக்கு வணக்கஸ்தலத்தையும் அமைக்க இடமளித்து இனமுரண்பாடற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற மகுடத்தை பின்பற்றி வெற்றி கண்டார்.
சுர்வதேச பல்கலைக்கழகத்தின் தரத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை தரமுயர்த்தினார். வரண்டு கிடந்த இருந்த பல்கலைக்கழக மண்னை பசுமைமிகு இயற்கைச் சூழலாய் மாற்றியது மட்டுமன்றி, பாரிய வீதி அபிவிருத்திகள் செய்து இதனைக் கடந்து செல்வோரையும் உள்ளே ஈர்ந்தெடுக்கும் தோற்றத்தைக் கொடுத்தார்;. புதிய பீடங்களை உருவாக்குவதுடன் முற்றுப்புள்ளி இடாமல், அதன் ஸ்திரத்தன்மைக்கும் புதுப் புது பாடநெறிகளைக் கொண்டு வந்தார்.
குவைத் நாட்டு நிதியுதவியை பெற்று இப்பல்கலைக்கழகத்திற்கு சகல வசதிகளும் கொண்ட மருத்துவ நிலையத்தினை அமைத்து வைத்தியர்களையும் நியமித்ததோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதிகளையும், சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வசதி கொண்ட பொது உணவகத்தையும்,பல மொழிகளிலான ஒரு இலட்சத்து இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்கொண்ட வியக்கத்தகு பொது நூலகத்தையும் அமைப்பதில் வெற்றி கண்டார். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தரமானவர்களை அதிகமாக வேலைக்கமர்த்தினார். விளையாட்டு அரங்கு, பொது மைதானம் போன்றவற்றை அமைத்து மாணவர்களின் கல்விசார நடவடிக்கைகளை வளப்படுத்தினார்.
இலங்கையே வியக்கும் அளவில் இரண்டு பட்டமளிப்பு விழாக்களை தென்கிழக்கு மண்ணிலேயே நடாத்தி மக்கள் நன்மதிப்பைப் பெற்றார். தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற இன மத பாகுபாடின்றி சகலருக்கும் சம உரிமை வழங்கினர். தென்கிழக்குப் பல்கலைக்கழக கட்டட நிர்மாணப் பணிகளில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திருப்பு முனைகளை ஏற்படுத்தினார். சர்வதேசமே வாய் பிளக்கும் அளவு, சுமார் 2500 பேர் ஒரே அமர்வில் கலந்து கொள்ளக்கூடிய பாரிய கேட்போர் கூடத்தை இவ்வளாகத்தில் அமைக்க நிதி திரட்டி வெற்றிகண்டார். இவரது விடாமுயற்சி இலங்கை ஓர் வளர்முக நாடு என்பதற்கு சாட்சியாகின்றமை எடுத்துக்காட்டாகும். கடலோரப் பகுதியில் இயற்கை சூழலில் சகல வசதிகளும் கொண்ட நான்கு மாடி விடுதி வாய்ப்பை ஏற்படுத்தினர்
பல்கலைக்கழக நாமம் சர்வதேச அளவில் ஒலிக்க வேண்டும் என அயராது உழைத்தவர். வெளிநாட்டு வளவாளர்களினும், மாணவர்களினதும் பல்கலைக்கழக பிரவேசத்தால் பூரிப்படையச் செய்தார். 2015ஃ16ஃ22 ஆம் திகதி வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் கீழ் இலங்கை கைவினை அமைப்பின் ளுசi டுயெமய ர்யனெiஉசயகவ டீழயசன- டுயஒயடய தலைவராக இலங்கை சபாநாயகரால் நியமிக்கப்பட்டார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் இந்நிறுவனம் பாரிய இலாபமீட்டும் நிறுவனமாக மாறியதில் நாட்டுக்கு வரமளித்தார்.
இவரது காலத்தில் தான் வெளிநாட்டிலிருந்து மாணவர்களுக்கு இப்பல்கலையில் உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பை வரமாக்கினார். மேலும், வெளிநாட்டிலிருந்து தன்னார்வ வளவாளர்களும் மற்றும் சர்வவேதச நிறுவனங்களினூடான வளவாளர்களும் இங்கு இலவச பாடநெறிகளையும் பயிற்சிகளையும் ஏற்படுத்தினர். கோரிய மொழி, சீன மொழி விரிவுரையாளர்கள் கலாநிதிப் பட்டப் படிப்புக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஏனைய பல பல்கலைக்கழகங்களில் கூட கலாநிதிப் பட்டப்படிப்புக்குக் கணிசமான பணம் ஒதுக்கப்படாத நிலையில் இவரது காலத்தில் கணனிப் போதனாசிரியர்களுக்குக் கூட சுமார் பதினைந்து இலட்சம் வரையிலான பணம் ஒதுக்கப்பட்டது எனலாம். இவரது காலம் சர்வதேச ஆய்வரங்குகளில் நமது மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் பங்களிப்பு காணப்பட்டன.
மேலும், இப்பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பீடத்திலும் ஆயவரங்குகளை வருடா வருடம் ஏற்படுத்தி விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளி ஆய்வாளர்களுக்கும் என வாய்ப்பை வழங்கினார். இவற்றின் மூலம் நம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மட்டத்திலான தரத்தினை முன்னேற்றுவதற்கான ஊக்குவிப்புக்களையும் வழங்கி இப்பல்கலைக்கழகத்தின் நிலையை உறுதிப்படுத்தினார். இவரது காலத்தில் பொறியியல் பீடம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் எப் பல்கலைக்கழகத்தையும் விஞ்சும் வகையில் பல்வேறு பெறுமதி வாய்ந்த உபகரணங்களைக் கொண்ட ஆய்வு கூடத்தினை நிறுவி இதன் முன்னணி தரத்தினை உறுப்படுத்தினார்.
பல்கலையில் இருந்து வெளியேறும் மாணவர்களின் கையாண்ட கல்வி, கல்விசாரா நடவடிக்கைகள் தலைமைத்துவப் பண்புகள் யாவும் சாட்சியமாகின. அஷ்ரப் ஞாபகர்தத நூலகம் இன்று சர்வதேச தரம் வாய்ந்ததாக துலங்குவதற்கும் இவரது வியர்வைத்துளிகள் காரணமாகின்றன.பல்கலைக்கழக வாயிலிருந்து ஒவ்வொரு துரும்பும் மர்ஹூம் அஷ்ரபை நினவு கூறும் வேளையில்,ஒவ்வொரு தூணும் கலாநிதி இஸ்மாயிலின் நினைவுச் சின்னங்கள் தான். இவ்வாறே, நாட்டு மக்களினதும், அரசியல் மற்றும் சர்வதேச செல்வாக்கையும் தன்னகத்தே ஈர்த்துக்கொண்ட திறமைமிக்க ஆளுமை வாய்ந்த பண்பாடுகளும் நற்குணங்களும் மிகுந்த தலைவராக சமூகம் இவரை அடையாளம் கண்டது.
அண்மைக்காலமாக இவரது அதிரடி அரசியல் பிரவேசமும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தியோதோடு சில விஷக்கிருமிகளையும் ஊடகங்களில் உலாவர வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி சுமார் 33,000 வாக்குகளுக்கு மேல் பெற்று சொற்ப வாய்ப்புகளை தவறவிட்டமையினால் பாராளுமன்ற உறுப்புரிமையை நழுவவிட்டார். மக்கள் மனதில் பதிய வேண்டிய விடயம் என்னவென்றால், அப்போது பதவியை கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இழந்தார் என்பதை விட இலங்கை ஓர் தலைசிறந்த சேவையாளனை இழந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
கடந்த 23.05.2018ம் திகதி புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இராஜினாமாவினைத் தொடர்ந்து கட்சிக்குள் அடுத்த பாராளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறை பிதாமகன் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஏகமானதாக கட்சி உயர்பீட உறுப்பினர்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்ட மக்கள் ஆரவாரத்தினை அடையச் செய்தார். கொழும்பு கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் ஊறு கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ தேசியத்தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கான பாராளுமன்ற உறுப்புரிமை பத்திரத்தினை வழங்கிவைத்தார்.
கடந்த 10 வருடங்களாக பாராளுமன்ற உறுப்புரிமை காணாத சம்மாந்துறை மண் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மயில் அறிமுக சின்னத்தில்தோகை விரித்தாடிய வரலாறு காணாத வெற்றிவாகையினை சூடியது. ஆனால் துரதிஷ்ட வசத்தாலும், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின்; சதி முயற்சியாலும் பாராளுமன்ற உறுப்புரிமை நழுவவிடப்பட்டது. இதன் அடிப்படையில் 33,102 வாக்குகளை தனித்து பெற்று தனது இருப்பினை பலப்படுத்தியது. இதன் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது. இது சம்மாந்துறை மண் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதமாகும். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதில் சாதித்துவிட்டார் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.
முஸ்லிம்களின் கல்வி நிலையை பன் மடங்காக உயர்த்தி இச்சிறுபான்மைச் சமூகத்தின் முதுகெழும்பாக மின்னிய போதிலும், விமர்சனங்கள் இவரைப் பதம் பார்க்கத் தவறவில்லை. உலகின் பல சாதனையாளர்களின் உயர்வுக்கு விமர்சனங்கள் கை கொடுத்தன. இவருக்குப் பின்னாலும் ஊழல் மோசடி,பதவிப் பொடுபோக்கு என பல குற்றச்சாட்டுக்கள் குவிந்த நிலையிலும் சேவையில் கண்ணாகவே இருக்கிறார் இம் மாமனிதர்.இவரது செயற்பாடுகள் காய்க்கின்ற மரத்திற்குத் தான் கல்லடிகள் என்பதனை உறுதிப்படுத்திவிட்டது. இப்பல்கலைக்கழகம் இன்னொரு இஸ்மாயிலின் வருகைக்காகதவம் கிடக்கின்றது எனலாம்.
சுயநலத்துக்காக பதவிகளுக்கும் காசோலைகளுக்கும் கையெழுத்திடுகின்ற ஒரு பச்சோந்திச் சமூகத்திற்கு தனது கையெழுத்துக்கு ஓர் அர்த்தம் வேண்டும் என நிலைத்து விட்டார் கலாநிதி இஸ்மாயீல் அவர்கள். நிரபராதி கூண்டிலிருக்க குற்றவாளி குளிர் அறையில் இருக்கும் ஓர் சுயநலவான சமூகத்தின் பிடியில் விமர்சனங்களால் பதம் பார்க்கத் தவறாத ஓர் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் கலாநிதி இஸ்மாயில் சம்மாந்துறை மண்ணின் தந்தை மட்டுமல்ல, கிழக்கை நீதியுடன் தலைநிமிரச் செய்த தூணாவார். இவரது குரல் பாராளுமன்றத்துடன் ஓய்ந்து விடாமல் சர்வதேசம் வரை ஒலிக்க நாம் இறைவனைப் பிரார்த்திற்போம்.