ஏ.எல்.எம்.றஹீம் அவர்களின் பிரிவானது சம்மாந்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.. உதுமான் கண்டு நாபீர்


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -

ம்மாந்துறை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும், பிரபல சமூக சேவையாளருமான ஜனாப் ஏஎல்எம்.றஹீம் அவர்கள் நேற்று (06.05.2018 )தனது நிரந்தர இல்லமான மறுமை வாழ்வினை நோக்கிய பயனத்திற்காக இறையடி எய்திய செய்தியினை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்ததுடன், அன்னாரின் பிரிவினை நினைத்து கவலையோடு இருக்கின்ற அவருடைய பிள்ளைகள், குடுப்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன தைரியத்தினையும், நிம்மதியினையும் கொடுக்க வேண்டும் என என பிரார்த்திப்பதோடு புனித சங்கை மிக ரமழான் மாதத்தில் இறையடி சேர்ந்துள்ள அன்னாரின் மண்னறையினை ஒளிமயமாக்கி மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் வசிப்பதற்கு எல்லோரும் பிரார்த்தனை செய்யுமாறு சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள அனுதாப இரங்கள் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இரங்கள் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது மர்ஹும் ஏஎல்எம்.றஹீம் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் பெரும் மதிப்பு மிக்க ஆதம் போடியார் குடுபத்தினை சேர்ந்தவர் என்பதுடன் முக்கிய சமூக சேவையாளராக மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல் சம்மாந்துறையினுடைய அரசியல் தலைமையும், பாராளுமன்ற பிரதி நிதித்துவமும் எப்பொழுதும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதில் தூர நோக்கு சிந்தனையுடன் மிக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஒருவராவார். அவருடைய இறுதி காலப்பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் தன்னை இணைத்துக்கொண்டு குறித்த கட்சியானது சம்மாந்துறையில் அதிகளவான வாக்குகளை பெறுவதற்கும், தவிசாளர் பதவியினை நெளசாட் மஜீத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் முன்னின்று உழைத்தவர் என்பதில் சம்மாந்துறை மக்களிடம் மாற்றுக்கருத்திருக்காது என்பது உண்மையான வரலாறாக பதியப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரபல்ய இரசாயனவியல் ஆசிரியரான மர்ஹும் றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதுர்டீனின்முக்கிய பாதுகாப்பு உதியோகத்தராக இருக்கும் உதவி பொலிஸ் அத்திகட்சகரான(IP) முஹம்மட் நஃபாரின் மூத்த சகோதரர் என்பதும் முக்கிய விடயமாகும். ஆகவே அன்னாருடைய நிரந்தரமான பிரிவானது சம்மாந்துறை பிரதேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகவே நாபீர் பெளண்டேசன் பார்ப்பதாக மேலும் தனது அனுதாப செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன். அல்லாஹும்மஃபிர்லஹு வர்ஹம்ஹு.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -