எம்.எஸ்.எம்.ஸாகிர்-
இலங்கை துறைமுக அதிகாரசபை வருடந்தோறும் நடாத்திவரும் துறைமுக முஸ்லிம் ஊழியர்களுக்கான இப்தார் நிகழ்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனுசரணையை துறைமுக அதிகாரசபை வழங்குவதோடு, இப்தாருக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை துறைமுக அதிகாரசபை - முஸ்லிம் மஜ்லிஸ் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் மஜ்லிஸ் பிரசாரச் செயலாளர் ஏ.சீ.எம். கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று (06) புதன்கிழமை, கொழும்பு -10 மாளிகாவத்தை செரண்டிப் கிராண்ட் மண்டபத்தில் மாலை 5.00 மணிமுதல் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே மற்றும் இலங்கைதுறைமுக அதிகாரசபையின் உயர் முகாமைத்துவ அதிகாரிகள் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.