இளம் தலைமுறையை இணங்காண்போம்


அஹமட் மன்சில்-
ரசியல் களம் புதிய தலைமுறையை உள்வாங்கி சமூகத்தின் விடியலுக்காய் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் பொத்துவில் மண்ணில் சிறந்த இளம் அரசியல்வாதி ஒன்றை உருவாக்கும் தருணம் அம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.யார் அந்த இளம் அரசியல்வாதி என்ற கேள்வி எழும் முன்னரே அவரை பற்றி கூறி விடுகிறேன்.வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறும் அதிர்வு நிகழ்ச்சி மூலம் இலங்கை மக்களிடம் பிரபல்யமடைந்த முஷர்ரப் தான் அந்த இளம் அரசியல்வாதி.

பொத்துவில் பாக்கியாவத்த அல்/கலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான மூன்று மாடி கட்டிட திறப்பு விழாவிற்கு
அழைக்கப்பட்டிருந்த முஷர்ரப்பின் வருகை பொத்துவில் அரசியலின் புது யுகமாகமாக அரசியல் அவதானிகளினால் நோக்கப்படுகிறது.பொத்துவில் மக்களின் மாகாணசபைத் தேர்தலின் சிறந்த தெரிவாக இம்முறை முஷர்ரப் மாறக் கூடும் என ஆருடம் பூண்டிருக்கிறார்கள்.

முஷர்ரப்பை பொறுத்தவரையில் அதிக சமூகபற்றுள்ளவர்.தான் சார்ந்த சமூகத்தை பற்றி சதா நேரம் சிந்திக்க கூடியவர்.தான் பிறந்த மண்ணின் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என நினைக்கின்ற மனப்பாங்குடையவர்.அவ்வாறான ஒரு இளம் அரசியல்வாதி அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும் ஒருவராகவே இருப்பார்.சமூகம் சார் சிந்தனையானது உலகில் பிறந்த சில மனிதர்களினுள்ளேயே உருவாகின்றது.அந்த சிந்தனை பொத்துவில் மண்ணில் பிறந்த முஷர்ரப்பிடமே அதிகமாகவே உள்ளது.எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொத்துவில் மக்களின் சிறந்த தெரிவாக முஷர்ரப் இருப்பார் என்பது அரசியல் களத்தில் தற்போது அதிகமானோரால் முணுமுணுக்கப்படுகிறது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -