கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கத்திற்குமிடையில் சந்திப்பொன்று நேற்று வௌ்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனை கூடிய விரைவில் புணரமைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இவ்வீதியினைத்திருத்தித்தருவதாகச்சொல்லி சில வேலைகளைச் செய்தார்கள் எனவும் அவ்வீதியை இன்னும் புனரமைக்க வில்லையெனவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அவ்வீதியினை புனரமைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் மற்றும் பணிப்பாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.