பின் கதவினால் செல்கின்ற அமைச்சர் றிசாட் வன்னி விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் தலையிட கூடாது என கூறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது… உதுமான் கண்டு நாபீர் ஆதங்கம்..


ஓட்டமாவடி அஹமட் இர்சாட்- 
டமாகான செயலணி சம்பந்தமான விடயமானது இன்றைய முக்கிய பேசு பொருளாக காணப்படுகின்றது. குறித்த செயலணியானது ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டமாக இடம் பெற்ற பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தலைமையும் அமைச்சருமான றிசாட் பதுர்தீனுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தேசிய தலைமையும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ஆகியோர்களுக்கிடையில் வடக்கின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் பெரும் வாக்குவாதமாக மாறியது என ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.

வடக்கின் மீள் குடியேற்றத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு றிசாட் பதுர்தீன் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீமை குறித்த குழுவில் உள்வாங்கினால் தாம் அதிலிருந்து உடனடியாக விலகுவதாக அமைச்சர் றிசாட்பதுர்தீன் கூறியுள்ள கருத்தானது சமூகத்தினை கேடயமாக பயன்படுத்தி அரசியல் குளிர்காய நினைக்கும் அவருடைய அடிமட்ட அரசியல் நாகரீகத்தினையும், மீள் குடியேற்ற விடயத்தில் தான் நினைத்தவாறு விளையாட முடியாமல் போய்விடும் என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு எதிராக அவர் போடுகின்ற வேலியாகவே நான் இதனை பார்க்கின்றேன் என பொறியலாளரும் சமூக சேவையாளருமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான் கண்டு நாபீர் தனது மறுப்பறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவிக்கின்றார்.

மேலும் தனது அறிக்கையில் நாபீர் தெரிவிப்பதாவது…. அமைச்சர் றிசாட்டுக்கு அரசியல் அந்தஸ்த்து அல்லது அரசியல் அடைக்கலம் கிடைத்துள்ளது என்றால்.! அது ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுடைய ஏக பிரதி நிதிகாளாக இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினாலாகும் என்பதை தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும்.`அமைச்சர் றிசாட் பதுர்தீன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 2500க்க்கும் குறைவான வாக்குகளை பெற்று தோல்விய தழுவிய பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் ஆசீர் வாதத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் களமிறங்கி பாராளுமன்ற சென்ற பிரதி நிதி என்பதனை ஒரு பொழுதும் மறந்து விடக் கூடாது.

வன்னி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருக்க கூடிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையான அமைச்சர் ரவூப் ஹக்கீம் முழு இலங்கையில் இருக்க கூடிய முஸ்லிம்களுடைய ஏகோபித்த தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியின் தலைவராகும். அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் வடக்கு, கிழக்கு மாகாணம் என மட்டுபடுத்தப்பட்ட ஒரு அமைச்சர் கிடையாது. அவர் இலங்கையில் உள்ள சகல மாவடத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களுடைய மீள் குடியேற்றம் அல்லது இருப்பு சம்பந்தமான பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்காக குரல் கொடுக்க கூடிய உரிமையும், தலையிடுவதற்கான அரசியல் அதிகாரமும் அவருக்கு இருக்கின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரசில் இருந்து அரசியல் முகவரி பெற்ற அமைச்சர் றிசாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது.

முஸ்லிம் காங்கிரசில் இருந்து அரசியல் முகவரியினையும், அதிகாரத்தினை பெற்றுக்கொண்டு அந்த கட்சிக்கு சேறு பூச நினைக்கின்ற விடயமானது அவருடைய மடமைக்கு கிடைத்துள்ள பரிசாகத்தான் நான் பார்க்கின்றேன். அது மட்டுமல்லாமல் பின்கதவினால் சென்று சந்திரிக்கா அம்மையாரிடம் வன்னி புணர்வாழு அமைச்சினை பெற்றுக்கொண்ட றிசாட் பதுர்தீன் வன்னி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அம்மக்களுடைய அபிவிருத்திகள் சம்பந்தமாக நோக்குகின்ற பொழுது அவரினால் பாரிய புறக்கனிப்புக்கள் இடம் பெற்ற காரனத்தினால்தான் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமை தானும் வடக்கினுடைய மீள் குடியேற்றத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற வேண்டும் என்ற நிபந்தனையினை முன் வைத்திருப்பார்.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய கூற்றினை நாங்கள் வர வேற்கின்றோம். வன்னியில் மட்டுமல்லாது எல்லா மாவட்டங்களிலும் உள்ள செயலணிகளில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலையிட வேண்டும். சில ஊழல் வாதில்கள் தாங்கள்தான் தலைவர் என்ற நினைப்பில் அதிகாரத்தினை கையில் எடுத்து வன்னி மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு வட மாகாணத்திலுமே மீள் குடியேற்றத்துடன் தொடர்புடைய எந்த அபிவிருத்திகளையும் செய்ததற்கான எந்த அறிகுறிகளையும் காணக்கிடைப்பதில்லை. பெயரளவில் அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில் அங்கு நேரடியாக சென்று பார்த்தால்தான் மீள் குடியேற்ற அமைச்சராவும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், புனர்வாழ்வு அமைச்சராகவும் இருந்த றிசாட் பதுர்தீனால் எவ்வாறான அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளது என்பத்னை தெளிவாக பார்க்க கூடியதாக உள்ளது.. அதற்காகத்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை குறித்த செயலணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற முடிவில் நாபீர் பெளண்டேசன் இருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் வன்னி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமை தலையிட கூடாது என அமைச்சர் றிசாட் கூறுகின்ற விடயமானது அவருடைய சிறு பிள்ளைத்தனத்தினை காட்டுகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றம் சென்று சில மாதங்களுக்குள் பின் கதவினால் சென்று அமைச்சு பதவியினை பெற்று வன்னி மக்களுக்கும் ஸ்ரீ லக்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் துரோகம் இளைத்தவ்ர்தான் இந்த அமைச்சர் றிசாட் பதுர்தீன். ஆகவே அமைச்சர் றிசாட்டினை நம்பி வன்னி மக்களையும், வட மாகாண முஸ்லிம்களையும் கை விடுவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைமை ஒரு பொழுதும் இட மளிக்காது.

எனவேதான் இந்த அடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் எந்தவொரு செயலணி அமைக்கப்படுகின்ற பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அதனை தலைமையும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம் மக்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. அதை விடுத்து அமைச்சர் றிசாட் பதுர்தீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை உள்வாங்க படுமாயின் செயற்குழுவில் இருந்து தான் விலகிச் செல்வதாக தெரிவித்துள்ள கருத்தானது பாலர் வகுப்பில் மாணவர்களுக்கிடையில் எழுகின்ற சண்டைகளைப்போல் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.

றிசாட் பதுர்தீன் விலகி செல்வதென்றால்.! தாராளமாக விலகி செல்லலாம். நீங்கள் விலகி செல்கின்றமையினால் வன்னி மாவட்டம் அபிவிருத்தியில் பின் தங்கிவிடும் என மக்கள் கொதித்தெழுவார்கள் என நினைக்கின்றார். இது வரைக்கும் வன்னி மாவட்டம் எந்த வித அபிவிருத்திகளையும் கண்டிராத மாவட்டமாகவே இருந்து வருகின்றது. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் அமைச்சராக இருந்து கொண்டு றிசாட் பதுர்தீன் வன்னி மாவட்டத்தில் செய்த அபிவிருத்திகள் என்ன.? ஊழல்கள்தான் அதிகமாக காணப்படுகின்றது.. ஊழல்வாதி என முத்திரை குத்தப்பட்டுள்ளது. வில்பத்து காணி கொள்ளையில் துவங்கி அரிசி ஊழல், பருப்பு ஊழல், ஈத்தம் பழ ஊழல், தும்பு ஊழல், செம்பு ஊழல், வீதியில் ஊழல். ஆற்றில் ஊழல், கடைசியா கொட்டை பாக்கிலும் ஊழல் என நீண்டு கொண்டே செல்கின்றது.

இவ்வாறான ஊழல்களை தடுப்பதற்காக வேண்டித்தான் குறித்த செயலணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் நாபீர் பெளண்டேசன் ஆணித்தரமான நிலைப்பாட்டில் இருக்கின்றது என அதன் தலைவர் உதுமான் கண்டு நாபீர் தனது அறிக்கையில் தெரிவிக்கின்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -