அறிக்கை இறுவெட்டாக வழங்கப்படவேண்டும்:நேரத்துக்கு கூட்டத்தைஆரம்பியுங்கள்!
கல்முனை மாநகரசபை அமர்வில் உறுப்பினர்கள் வேண்டுகோள்!!
காரைதீவு நிருபர் சகா-கல்முனை மாநகரசபையின் முதலாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதா? முடிவுறுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் இடம்பெற்ற இரண்டாவது கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
அந்த சர்ச்சை சுமார் ஒருமணிநேரம்வரை நீடித்தது.
அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர் முபீத் சர்ச்சையை ஆரம்பித்துவைத்துரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மாறிமாறி எதிரும் புதிருமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முதல்வர் றக்கீப் பதிலளிக்கையில் கூட்டத்தில் உரையாற்ற முன்பு முதல்வரின் அனுமதிபெறப்பட்டதா? என்று உறுப்பினர் முபீத்திடம் கேட்க அவர் அதற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர்கூறுகையில் கூட்டத்தை ஒத்திவைப்பதாயின் யனதழரசநென என்று கூறியிருப்பேன் ஆனால் நான் வைன்ட்அப் றுiனெரி என்றுதான் கூறினேன். அதாவது தமிழில் முடிவுறுத்துவது என்ற பொருள். தேவையானால் கூட்டக்குறிப்பைப்பாருங்கள். முடிந்தால் கூட்டக்குறிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் ஏற்காவிட்டால் நீதிமன்றம் செல்லலாம். எதற்கும் இவ்விடத்திலேயே பதிலைக்கூறுங்கள் என்றார்.
முதல்வரின் இவ்வறிப்பின்பின்னரும் உறுப்பினர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டவண்ணமிருந்தனர்.
த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் கூறுகையில்: இந்தச்சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைப்பதானால் கடந்தகூட்ட பதிவை அதாவது கசட்டைப் போடுங்கள். அது உண்மையைக்கூறும். மற்றது. இங்கு எமக்குவழங்கப்பட்ட கூட்டறிக்கையில் நிறைய பிழைகள் உள்ளன. பல விடுபட்டுள்ளன. எதற்கும் கசெட்டைப் போடுங்கள் என்றார்.
இறுதியில் ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் இசட்.எ.றகுமான் கூறுகையில் இந்தச்சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவேண்டும். இனிமேல் சபை செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பை சி.டியில்(இறுவெட்டில்) வெளியிடவேண்டும். இப்படியான சார்ச்சை வந்தால் அதனைப்போட்டுப்பார்த்துக்கொள்ளலாம். வெட்டி ஆள நினைத்தால் நாமும் வெட்டி விளையாடுவோம். அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தவேண்டாம் . நடந்தது நடந்ததுதான். சரி திருத்தங்களோடு தற்போதைக்கு ஏற்றுக்கொள்வோம். என்றார். சபையும் ஏற்றுக்கொண்டது.
முதல்வர் பதிலளிக்கையில்: இங்கு உறுப்பினர்கள் சிலர் பேசியதுபோன்று தணிக்கையுமில்லை திணிப்புமில்லை. அறிக்கைக்கு செயலாளர்தான் பொறுப்பு. மனிதர்தானே. சிலவேளைகளில் சிலபிழைகள் தவறுகள் நடக்கலாம். இனிமேல் அப்படி நடக்காது என்றார்.
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சந்தரசேகரம் ராஜன் கூறுகையில்: சபை அமர்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கவேண்டும். இன்று 10.30 மணி என்று குறித்துவிட்டு 11.20க்கு அதாவது சுமார் 1மணிநேரம் தாமதித்து ஆரம்பித்துள்ளீர்கள். அனைவரும் வேலைப்பழு உள்ளவர்கள்தான். இனியாவது நேரத்திற்கு கூட்டத்தை நடாத்துங்கள் என்றார்.
சாய்ந்தமருது சுயேச்சை உறுப்பினர் றபீக் கூறுகையில்: புதன்கிழமை என்பது மக்களைச்சந்திக்கும் பகிரங்கநாள். அப்படிப்பட்ட நாளில் கூட்டத்தைக்கூட்டக்கூடாது. புதன்கிழமையைத் தவிர்க்கவேண்டும் என்றார்.
இறுதியாக முதல்வர் றக்கீப் கூறுகையில்: நிதிக்குழு அமைப்பது தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருந்தேன். எதிர்காலத்தில் ஒருமித்து இனமத கட்சி பேதங்களுக்கப்பால் மக்கள் சேவை செய்யவேண்டும். நிதிக்குழு உள்ளிட்ட உபகுழுக்கள் அமைப்பது என்பது பேசுபொருளாகவுள்ளது. நாம் எதுவானாலும் ஜனநாயகரீதியில் செயற்படவேண்டும். என்றார்.
நிதிக்குழு அமைப்பதற்காக பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அதில் உறுப்பினர்கள் ஜவர் தெரிவானார்கள். மேயர் தலைவராகவிருப்பார். ஆனால் ஏனைய 5பேரும் எதிரணியினைச்சேர்ந்தவர்களாவர். அதேபோன்று ஏனைய 2 உபகுழுக்களும் எதிரணிவசமாகின.