அன்மையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் சார்சைக்குரிய கருத்தொன்றை பதிவு செய்திருந்தார். இந்த விடையம் இன்று பலராலும் எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் சில முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆதரவு வழங்கியும் வருகின்றார்கள்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இனவாதத்துக்கு பெயர் போனவர் இவரின் அமைச்சுப் பதவி கூட அன்மையில் பறிக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் நமது முஸ்லிம் சமூகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது.
ஞானசார பிக்குவுடன் நீண்ட தொடர்பு கொண்ட இவரை இன்று முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிக்கின்றார்கள் காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு எதிராக நேற்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தமையே.
நமது நாட்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை வந்த போது உடனே அந்தந்த இடங்களுக்குச் சென்று இந்த சமூகத்தின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்குகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அந்த இனவாதியின் கருத்து ஒரு பெரிய விடையமே அல்ல.
அத்துடன் சக்திTv ஒரு இனவாத ஊடகம் என்பதையும் இந்த சமூகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது அன்மையில் கண்டி திகனயில் நடைபெற்ற எந்தவொரு அசம்பாவித செய்திகளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் இந்த இனவாதிக்கு இன்று மீண்டும் சக்திTv போன்ற ஊடகங்கள் கொடிபிடிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை .
ஆனால் நமது சமூகத்தில் முஸ்லிம் கட்சியென்று மக்களை ஏமாற்றித்திரிகின்றவர்கள் மத்தியில் இன்று அந்த இனவாதிக்கு ஒரு பெரும் ஆதரவு வருகின்றது என்றால் நிச்சயமாக நாமது சமூகம் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
உண்மையில் துவேசம் என்பது சிங்களவர்களிடம் இல்லை நமது முஸ்லீம்களிடம்தான் உள்ளது என்பதை மு.கா உறுப்பினர்கள் நிரூபணம் செய்து விட்டார்கள்.