ஏற்கனவே ஒரு மாத காலத்தின் முன் இது போன்ற சிறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது
அக்கரைப்பற்று முஸ்லீம் பிரதேசத்தில் தமிழர் தரப்பினர் வேலைக்கு வருவது நிறுத்தப்படுகிறது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப் பட்டு விளக்கமறியல் வைக்கப்படுகிறார்.
ஆலையடிவேம்பு மக்கள் திரண்டு வந்து பிரதேச சபை தவிசாளரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்ட பேரணியும் ஹர்த்தாலும் அனுஷ்டக்கப்படுகிறது.
இவ்வாறு தொடர இருக்கும் விடயங்களால் நாம் எதனை அடைந்து கொள்ள போகிறோம்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நன்பர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் தவத்தினடைய ஆதரவாளர்கள் என்றும், தமிழர் தரப்பில் பா.உறுப்பினரும், நன்பர் தவம், நஸீர் பா.உ போன்றவர்களின் நெருங்கிய நன்பர் கோடீஸ்வரனும் முன்னிற்கின்றார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், சில இடங்களில் ஆட்சியமைக்க தமிழ் தரப்பினருடன் பேசி பொத்தவிலில் கூட்டமைப்புடனும், கல்முனையில் கூட்டணியுடனும் இணைந்து ஆட்சி அமைத்தும் இருக்கிறார்கள்.
அதே போல் மு.கா தலைவர் நல்லாட்சியில் பலம் பொருந்திய அமைச்சர், அவர் ஒரு போதும் தமிழர்களுடைய ஆயுத போராட்டத்தையோ, ஜனநாயக போராட்டத்தையோ கொச்சைப்படும் அதாஉல்லாஹ் வின் அரக்கத்தன அரசியலை செய்யவில்லை எனவும் கூறியவர்,
எனவே சம்பந்தப்பட்ட தமிழர் தரப்புடனோ அல்லது இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலோ இது தொடர்பில் பேசாமல் இருப்பதும், மக்களுக்கிடையில் உள்ளூர் அரசியல்வாதிகள் இனவாத கருத்தை விதைப்பதும் மிகப்
பெரிய சந்தேகங்களை உண்டு பண்ணகிறது.
அதாஉல்லாஹ் வடக்கு கிழக்கை பிரிக்க சொன்னவர், புலிகளுக்கெதிராக வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர் அவரை விட தமிழர் தரப்புடன் நெருக்கமான நல்லாட்சியின் பங்காளிகள், அதிகாரத்தரப்பு என்கின்ற வகையில் இவர்கள் பேசாமல் இருப்பது ஏன்?
மீண்டும் சந்தேகம் எழுகின்றது!!!
புலிக்கொடியா? பிறைக் கொடியா? எனும் கோச அரசியல் தான் உணர்வுகளை சீண்டி சுயநல செய்ய வழி வகுத்தது
அவ்வாறான நிலையை உருவாக்கி மக்களை குழப்பி அவர்களது நோக்கங்களை அடைந்து எடுகின்ற முயற்ச்சியா?
வேலி அடைக்க வந்தவர்களை தாக்கியது, வன்முறை பிரயோகித்தமை மிகத் தவறு அதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஆனால் மக்களை தூண்டி தீர்வு காண முடியாத குழப்பங்களுக்குள் மக்களை கொண்டு சேர்க்க முடியாது
வரலாற்றில் இவ்வாறான சூழ்ச்சிகளுக்குள் சிக்கி வடக்கில் கிழக்கில் நாடு தழுவிய ரீதியில் நாம் சந்தித்த அவலங்கள் போதும்,
தீர்வை நோக்கி நகர்வோம்.