கிண்ணியா வலயக் கல்வி புதிய அபிவிருத்திக் குழு உதயம் ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதான கல்விக்கான அபிவிருத்திக் குழு நேற்று(21)வியாழக் கிழமை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய குழு உருவாக்கம் கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி இஸட் .எம்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றது.

கிண்ணியா வலயத்தின் கல்வி மேம்பாடு குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் பலராலும் பேசப் பட்டாலும் சம்மந்தப் பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து தொழிற் பட்டாலே அன்றி இலக்கினை அடைவது சாத்தியமாகாது.

அதன் பிரகாரம் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம். நளீம் அவர்களுடன் புதிய சபை உருவாக்கம் பற்றிய பேச்சு வார்த்தையின் பலனாக நல்ல பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. கிண்ணியா வலயத்துக்கென கல்வி அபிவிருத்தி சபை ஒன்றை உருவாக்குதல், அச்சபையின் ஆலோசனை, வழிகாட்டல்கள் ,ஒத்துழைப்புகளையும் பெற்று கல்விக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டு ஒன்றுபட்டு தொழிற் படுவதானது கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைவாக இச் சபைக்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் இருவர், ஆசிரிய ஆலோசகர் இருவர், அதிபர் சங்க பிரதி நிதி ஆகியோர் கல்வி அலுவலகம் சார்பாகவும், சமூக நிறுவனங்களான சூறா சபை சார்பாக ஏ.ஆர்.எம்.பரீட் , எஸ்.ஏ. சராப்தீன் , வீ.எம்.மூமின் , பள்ளி சம்மேளனம் சார்பாக ஏ.எஸ்.எம்.யுனைதீன், எம்.எம்.மஹ்தி எச்.எம் .தாலிப் அலி ஹாஜியார், உலமா சபை சார்பாக இஸட்.எம். பாஹிர் மௌலவி, ஜஹாங்கீர் மௌலவி, பிர்தௌஸ் மௌலவி பிரதேச செயலக சம்மேளனம் சார்பாக எஸ்.ஏ.எம் .பாறூக் , ஏ.எம். அப்துள்ளா உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களான எஸ்.எச்.எம்.நளீம் , கே.எம்.நிகார், எஸ்.எம்.சுபியான் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பிரதி நிதியாக ஈ.எல்.அனீஸ் அவர்களும், .இம்ரான் மஹ்ரூப் அவர்களின் பிரதி நிதியாக ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களும்,.எம்.எஸ். தௌபீக் அவர்களின் பிரதி நிதியாக கே.ஏ.அகது அவர்களும் முன்னால் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர்.நஜீப் ஏ மஜீட் அவர்களின் பிரதி நிதியாக சட்டத்தரணி எம்.எச்.எம்.ராபி அவர்களும் வைத்தியர்கள் சங்கம் சார்பாக டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் அவர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பாக கலாநிதி எம்.ஜீ.எம்.தாரிக் , சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.டீ.ஹபீபுள்ளா மௌலவி அவர்களும் உள்வாங்கப் படுவதற்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தனர். இதன்போது கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் கருத்து தெரிவிக்கையில் கிண்ணியா கல்வி வலயம் முள்ளிப்பொத்தானை,கிண்ணியா,குறிஞ்சாக்கேணி போன்ற கோட்டங்களை கொண்டுள்ளது .இதில் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளும் காணப்படுவதுமுண்டு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது இவ்வாறாக பல பிரச்சினைகள் இருப்பினும் இக் கல்விக்கான புதிய குழுவின் மூலமாக கல்வியை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாம் மேம்படுத்த வேண்டும் என்றார்.

 இம்முயற்சியானது சிறந்ததும் வரவேற்கத் தக்கதுமான ஒரு மைல் கல்லாகும் என கலந்து கொண்டோர்களில் ஏனையோரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்வரும் காலங்களில் கிண்ணியாவின் கல்வி வளர்ச்சியில் இச்சபை பாரிய பங்களிப்பை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -