உலகில் 24மணிநேரமும் ஓதப்படுகின்ற வேதம் அல்குர்ஆன் ஆகும். அது
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் அச்சமூட்டி
எச்சரிக்கைசெய்து உபதேசம் செய்யும் வேதமாகும்.
இவ்வாறு சம்மாந்துறை பிரதேச செயலக நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில்விசேடஉரையாற்றிய மௌலவி ஏ.எல்.ஆதம்பாவா தெரிவித்தார்.
மேற்படி இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எச்எம்.எம்.பஸீல்
கௌரவ அதிதிகளாக பேராசிரியர் றமீஸ்அப்துல்லா பிரதேச செயலாளர்களான
எம்.எம்.நசீர்(இறக்காமம்) ஜே.அதிசயராஜ்(அட்டாளைச்சேனை)
ஜ.எம்.ஹனிபா(சாய்ந்தமருது) உள்ளிட்ட உயரதிகாரிகள் சர்வமத பிரமுகர்கள் சமய சமுகத்தலைவர்கள் எனபலதரப்பட்டவர்கள் கலந்துசிறப்பித்தனர்.
மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தௌபீக் வரவேற்புரையாற்ற மௌலவி ஆதம்பாவா மேலும் உரைநிகழ்த்துகையில்:
உலகிலுள்ள ஏனைய சமயங்களிலும் வேதங்கள் ஓதப்படுகின்றன. ஆனால் உலகில் அதிகமான பலகோடி மக்கள் ஓதுகின்ற வேதம் அல்குர்ஆன் ஆகும்.
இது இறைவனால் றமழான் காலத்தில் இறக்கப்பட்ட வெதமாகும். அதனால் இதற்கு ஈர்ப்புசக்தி அதிகம். இது ஓதப்பட்டது ஓதக்கூடியது.
1400வருடங்களுக்கு முன் இறக்கப்பட்ட அல்குர்ஆன் வேதம் 1000ஆண்டுகளுக்குப் பின்னால் நிகழக்கூடிய விஞ்ஞான உண்மைகளைக்கூறிநிற்பது வியப்புக்குரியது.
எந்த மதமானாலும் ஒரேயொரு மூதாதையரிடமிருந்து மனிதகுலம் தோன்றியது. ஆதாம் ஏவாள் ஆதம் அவ்வா. இறைவன் ஒன்றுதான். மனிதர்கள் அனைவரும் சமம். என்றார்.
நிருவாக உத்தியோகத்தர் சலீம் நன்றியுரையாற்றினார்.




