காரைதீவு நிருபர் சகா-
விவசாய ஊக்குவிப்புச்செயற்றிட்டத்தின் கீழ் நிந்தவூர்ப் பிரதேச விவசாயிகளுக்கு நுண் நீர்ப்பாசன முறைமை ( Micro Irrigation Method) தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் விரயத்தைக் கட்டுப்படுத்தி வினைத்திறனுடனான நீர்ப்பாசனத்தை முன்னெடுத்தல் இப்புதிய பொறிமுறையின் நோக்கமாகும்.
இந் நிகழ்வு நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் கிராமத்தில் நிந்தவூர்ப்பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக விவசாய உதவிப்பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் கலந்துகொண்டார்.
திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயப்பிரதிநிதிகள் பங்கேற்று இப்புதிய திட்டம் தொடர்பில் செய்முறைப்பயிற்சியும் வழங்கப்பட்டது.
புதிய நுண் நீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ் பாசனம் செய்யப்பட்ட பயிர்ச்செய்கையினையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இம்முறைமையில் அளவான தண்ணீர் போதுமானது. தண்ணீர் விரயமாவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.