சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்... (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்...

ன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (08.07.2018 அன்று காலை 08.00 மணிக்கு) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல், அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 29வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இங்கு வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.

*** போட்டிகள் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 08,00 மணிக்கு GZ Affoltern, Bodenacker 25, 8046 Zürich-Affoltern என்ற இடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

*** உங்கள் விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி
PEOT, Postfach 357, 3414 Oberburg.
அல்லது/or: ploteswiss@gmail.com

தொடர்புகட்கு:-
077.9485214, 078.9167111, 078.6461681, 079.7333539, 079.9401982, 079.9297719, 076.4454112, 079.2104566





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -