தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அந்த நிலைப்பாட்டில் ஒரு மாற்றமும் எமக்கில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, அதற்கு தடையாக உள்ள சில காரணங்களை கூறுகிறார். அந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் நேற்று (26)மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.
இதன்போத தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ,
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சில தினங்களுக்கு முன்னர் நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அப்போது சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவிதமான மற்றமும் ,ல்லை. ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தடையாக உள்ள சில காரணங்களை கூறியிருந்தார். அந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியவையாக ,ல்லை.
ஆனாலும் ,ந்த அரசாங்கத்தை கொண்டே அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். வெறுமனே ஆனந்த சுதாகரனை மட்டுமல்லாமல் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கணவனும் மனைவியும் தடுத்துவைக்கப்பட்ட மனை 17 வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
கணவன் தொடர்ந்தும் சிறையிலேயே ,ருக்கின்றார். ,வர்களுடைய பிள்ளைகள் 17 வருடங்களாக பெற்றோருடன் வாழவில்லை. ,ப்படி ஒவ்வொரு அரசியல் கைதிக்கு பின்னாலும் ஒவ்வொரு துயரம் நிறைந்த கதை உள்ளது. ,தேபோல் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் சில விடயங்களை விரைவில் பேசவுள்ளதாக அறிந்து கொண்டோம். அதில் அரசியல் கைதிகளின் விடுதலையும் உள்ளடக்கம். ஆகவே தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதன் ஊடாக அரசியல் கைதி களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.