நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டஅவர் மேலும் கூறுகையில் ,
இன்று எமது தாய் நாடு இலக்கின்றி பயணித்துவருகிறது.ஆனால் ஆட்சியாளர்களோ நாட்டின் நலன்களைபற்றி சிந்தித்தி செயலாற்றாமல் அவர்களின் கட்சிகளுக்குள்உள்ள பிரச்சினைகளைப் பற்றியே சிந்துத்தும் பேசியும்வருகிறார்கள்.
தற்போது அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்கள் உலகில் எங்கு சென்றாலும் சுதந்திர கட்சிக்குள்ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றியே பேசுகிறார்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டை மறுசீரமைப்பதை விட்டுகட்சியை சீரமைப்பதாக காலத்தை கடத்தி வருகிறது.
கட்சியை மறுசீரமைப்பதாக கூறிய ஐக்கிய தேசிய கட்சிமூத்த உறுப்பினர்கள் தற்போது சிரிகொத்த வாசலில்தலையில் கையை வைத்துக்கொண்டு உள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவுவீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்குசீர்கெட்டுள்ளது.பாதாள உலகம் கோஷ்டிகள் தலைதூக்கியுள்ளன.அரசாங்கத்தின் சில பாராளுமன்றஉறுப்பினர்கள் நீதி மன்றத்தை எல்லை மீறிவிமர்சிக்கின்றனர்.
நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக் முகம்கொடுத்துள்ளனர்.இதனை ஆட்சியாளரகள் புரிந்துகொள்ளவேண்டும்.இப்படியே காலத்தை கடத்தாமல் எஞ்சியிருக்குஒன்றரை வருட காலத்திலாவது மக்களுக்கு நன்மைஏற்படக்கூடிய ஏதாவது செய்யுங்கள் என்ற கோரிக்கையைநாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கின் என அவர்குறிப்பிட்டார்.