அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை,களுவாஞ்சிகுடியில் 11 மாணவர்கள் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்திபெற்று பாடசாலை வரலாற்றில் பெரும் சாதனை புரிந்துள்ளனர்.
ஆ.லோஷனன், ச.டிகானா, வி.குவீனா ,நி.கிருஷிகன், பி.விசாகரி, ம.மதுஷனன் ,ந.கோமிக்கா, த.தினோஜன், சு.தரணியா ,ஜெ.யேனுஷன், ம.மதிபன் ஆகியோர் 9 பாடங்களிலும் ” ஏ ” சித்தியும் 14 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்றுள்ளதுடன் பெரும் தொகையிலான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கல்வி பயில்வதற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பகுதித்தலைவருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள் ,இணைந்த அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள நிலையில் இந்த பரீட்சை முடிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளமை மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வாகுமென பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.