கண்டி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியில் அதீத ஈடுபாடு காட்டிய அன்னார், ஆரம்ப காலம் முதல் இந்த மாவட்டத்தில் கட்சி தொடர்பில் தெளிவுபடுத்தி மக்கள் மனதில் வேரூன்ற செய்தவர். பொறியியலாளரான இவர் சமுகத்தின் பால் அதிக அக்கறை காட்டியவர்.
சமுதாயப் பணியை சந்தோசமாக மேற்கொண்ட அவர் கண்டி மாவட்டத்தில் நமது சமூக மேம்பாட்டுக்காக உழைத்தவர்.
தான் பிறந்த மண்ணான அக்குரனை பிரதேச மக்களின் வாழ்வியல் மேம்பாட்டில் கரிசனை காட்டியவர். வறிய மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவினார். கண்டியில் வாழும் நமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் அவற்றை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டிருந்தார். அத்துடன் அக்குரணை மாணவர்களின் கல்வியிலும் நாட்டம் காட்டினார்.
அன்னாரின் இழப்பால் வருந்தும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதலை வழங்க வேண்டும். அத்துடன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதி கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.