இணைப்பாளர் அஸ்வான் மொளலானா
பிரதமர் ரணில் விக்கிமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை தோல்வியடைச் செய்து அமோக வெற்றி பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் பிரச்சாரச் இணைப்புச் செயலாளர் அஸ்வான் மௌலானா வாழ்த்துக்ளைத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-மிக நீண்ட காலமாக பிரதமர் ரணில் விக்கிமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நடந்து வந்த கொடுங்கோல் ஆட்சியை மீட்டெடுத்து நல்லாட்சிக்குக் கொண்ட வந்து நாட்டின் பெருளாதாரத்தைக் கட்டியெழுப்பி பெருமை பிரதமர் ரணில் விக்கிமசிங்கவையே சாரும்.
இதை அறிந்திடாத வங்குரோத்து அரசியல் செய்யும் சில நயவஞ்சகர்கள் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனையைக் கொண்டுவந்து மூக்குடைக்கப்பட்டுப் போனார்கள்.ஊழலற்ற அரசியல் தலைவராக இருந்து வரும் ரணில் விக்கிரமசிங்கவை ஊழல்வாதியென்று பொய்ப்பிரச்சாரம் செய்து நாட்டு மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களைப் பரப்பிப்பிவருகின்றனர்.
இவ்வாரான அரசியல் வாதிகளை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தன்டனை வழங்கவேண்டும்.ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும்ஊழலுக்குத் துணை போகாதவர் இவர் அனைத்த இன மக்களையும் சமமாகவும்.சமத்துவமாகவும் மதித்து நடப்பவர்.இவர் அரசியலுக்கு வந்ததில் இருந்த இன்று வரை நேர்மையாக அரசியல் செய்து வரும் இவர் ஒரு உன்னத மனிதர்.
இவருக்கு யாரும் அரசியல் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை பொறுமையோடு இருந்து சகல விடையங்களையும் சாதிப்பவர் யாரையும் இழிவு படுத்தாமல் மனச்சாட்சியுடன் செயற்படுபவர் இந்த நாட்டை கட்டியெழுப்பவதில் தீவிரமாகச் செயற்படுபவர் எனவே இவருடன் இணைந்து இந்த நல்லாட்சியல் நாட்டைக்கட்டியெழுப்ப அனைத்து அரசியல்வாதிகளும் பேதங்களை மறந்து ஒன்றுபட முன்வர வேண்டும் என அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.