பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை ஸாஹிரா மாணவர்களுக்கு கற்றல் மற்றும் உளவள ஆலோசனை கருத்தரங்கு!!!

திர்வரும் டிசெம்பர் மாதம் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்ச்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் உளவள ஆலோசனை கருத்தரங்கு இன்று 10.04.2018 (செவ்வாய்க்கிழமை) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் வளவாளராக அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரியின் உளவள ஆலோசகரும் பிறை எப் எம் வானொலி அறிவிப்பாளருமான பிஷ்ரின் ஸஹாப்தீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி கற்கும் முறை மீட்டல் பயிற்சிகள் கற்றலுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் விரிவுரை வழங்கினார்.
பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான எம் எஸ் முஹம்மட் அவர்களது தலைமையில் பழைய மாணவர் சங்கத்தின் பதில் செயலாளர் ஏ எம் எம் ரிபாஸ் அவர்களது நெறிப்படுத்தலில் கீழ் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக மனித வலு அபிபிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். ரியாஸ்லின் அவர்கள் கலந்துகொண்டதோடு, பழைய மாணவர் சங்கத்தின் பிரதி தலைவர் பொறியியலாளர் ஜௌஸி, தரம் பதினொன்று பகுதித்தலைவர் ஏ.எச்.எம் ரிஷான் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர்.
இங்கு கருத்துத்தெரிவித்த அதிபர், கடந்த ஒரு வருட காலமாக இயக்கமின்றி இருந்த பழைய மாணவர் சங்கத்தின் பதில் செயலாளராக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம் ரிபாஸ் பொறுப்பெடுத்த பின்னரே இவ்வாறான ஆக்கபூர்வமான பாடசாலை மாணவர்களுக்கு நலன் கிடைக்கும் திட்டம் அமுலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும்  மேலும் எதிர்காலத்தில் பல்வேறு மாணவர் நலன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவரது உரையில் தெரிவித்தார்.
கற்றல் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் விரிவுரையின் இறுதியில் மாணவர்களது கேள்விகளுக்கு வளவாளர் பதில் வழங்கியதுடன் குழு கலந்துரையாடலாக இடம்பெற்றதுடன் இக்கருத்தரங்கில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர் பலன் பெற்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -