கனேடிய தூதுக்குழு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு


ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

னேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (25) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும் கிராமப்புறங்களுக்கான நீர் மூலங்களை கண்டறிந்து அவற்றை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதிலுள்ள சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.

அவ்வாறே, கழிவுநீரை சுத்திகரித்தல் மற்றும் திண்மக் கழிவகற்றல் என்பவற்றை பொறுத்தவரை தமது அமைச்சு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பல்வேறு செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தூதூதுக் குழுவினரிடம் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -