வவுனியா மாவட்டத்தின் சார்பில் 45வது தொடக்கம் 49 வரையான ஜனாதிபதி சாரணர்களுக்கான பதக்கங்கள் இன்றைய தினம் மாவட்ட ஆணையாளரும், வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபருமான திரு ம.ச.பத்மநாதன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சாரணன் ஞா.நவநீதன் , வ/தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலய சாரணன் பி.கெர்சோன் , வ/விபுலாநந்தா கல்லூரி சாரணன் யோ.சதுர்ஷிகன் ஆகியோருடன் வ/கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம் பெண் சாரணர்களான சா.சுஹானி,
த. தர்சிகா வினோஷனி ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் வவுனியா உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண தலைவர்கள், மாவட்ட சாரண சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதி சாரணர்கள், சாரணர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.