யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மருத்துவக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி 5,6,7 திகதிகளில் காலை 9 மணி முதல் பி.ப. 7 மணிவரைநடைபெறவுள்ளது.
அடிப்படை விஞ்ஞானம் மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள் நிகழ்கால சுகாதார சவால்கள்சுகாதார தொழில் வாய்ப்புக்கள் சிறுவர் ஆரோக்கியம் யௌவன பருவ ஆரோக்கியம் வயது வந்தோர் சுகாதாரம் முதியோர் சுகாதாரம் ஆகிய எட்டுத் தொனிப்பொருள்களில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழப்பாணம் மருத்துவபீடமும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.