நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் பிரதமர் இலகுவாக வெற்றிகொள்வார். இது ஊடகங்களினாலயே பெரிதாக காட்டப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள பிரட்சினை எமது கட்சிக்குள் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பே.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் எமது கட்சி ஆதரவாளர்களை கட்சி திருப்திபடுத்தவில்லை. கட்சி ஆதரவாளர்கள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்றும் அதிருப்தியுடனையே உள்ளனர். கட்சியின் அதிகாரம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் குவிந்து காணப்படுவதே இதற்கான காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ச எப்படி ஆட்சி நடாத்தினாலும் அவர் தமது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை திருப்திபடுத்தினார். ஆனால் நாட்டின் கடனை அடிக்கிறோம், பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறோம் என கூறி எமது அமைச்சர்கள் கட்சியை கவனிக்க தவறிவிட்டனர்.
அமைச்சர்கள் ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் வழங்கும் போது நூறு வேலை வாய்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே. ஆனால் அவ்வாறு இல்லை என்பதே இப்போதுள்ள பிரட்சினை ஆகும்.
ஆகவே இந்த பிரட்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் கட்சி முழுவதுமாக மறுசீரமைக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அவ்வாறு இல்லாவிடின் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கவும் 2020இல் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக்கவும் பாரிய போராட்டம் ஒன்றை கட்சிக்குள் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.