இரண்டு பொம்மைகள் செய்தான்
++++++++++++++++++++++++++++++
Mohamed Nizous
இலங்கையை இரண்டு கட்சிகள் மாறி ஆட்சிகள் செய்யும்-அவை
இரண்டும் உள்ளால் நாட்டை சுரண்டி
ஆட்டையைப் போடும்
இது நாம் கண்ட உண்மை
இது நடக்கின்ற கொடுமை
பொய்கள் என்ன போஸ்டர்கள் என்ன
நீலம் என்ன பச்சை என்ன
ஊழல்கள் செய்யும் போது
எல்லாமும் ஒன்றடா
தேர்தல் காலம் தேசப் பற்று
தெரிவாகி வந்ததும் மோசடி செய்வார்
இது தானே இலங்கை நாட்டில்
இருக்கின்ற தலை விதி
இது நாம் கண்ட உண்மை
இது நடக்கின்ற கொடுமை
உங்களுக்காக இந்தக் கட்சி
உங்களுக்காக இந்த ஆட்சி
கூட்டத்தில் கோஷம் கேட்டு
கொடுப்பார்கள் ஓட்டுக்கள்
தந்த வாக்கு காற்றில் கரையும்
முந்தியதைப் பார்க்க மோசமாய் அமையும்
அவரவர் பலத்தைப் பெருக்க
கலவரம் தூண்டுவார்
இது நாம் கண்ட உண்மை
இது நடக்கின்ற கொடுமை
சிலர்கள் போடும் வேசம் தெரியுது
சிரித்து அறுக்கும் மோசம் புரியுது
இரு கட்சி அரசிலும் இருப்பார்
இனவாதம் தூண்டுவார்
அழுத்கம அழிவிலும் மந்திரிப் பதவி
திகன அழிவிலும் மந்திரிப் பதவி
மகன் இந்த அரசு மாறினும்
மறையாது தொல்லையே
இது நாம் கண்ட உண்மை
இது நடக்கின்ற கொடுமை