ஜக்கிய நாடுகள் அமையம் கொழும்பு அலுவலகம், கல்வி அமைச்சு , ஜனாதிபதி அலுவலகம், மற்றும் ஹற்றன் நெசனல் வங்கி ஆகியன இணைந்து நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவ மாணவிகளுக்கிடையே ”நிலைபெறாத செயத்திட்ட அபிவருத்தி எனும் தலைப்பில் 17 தலைப்புக்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்ற 50 பாடசாலைகள் மாணவா்களை கொழும்புக்கு அழைத்து இன்று அவா்களுக்கு ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டு 50 ஆயிரம் ருபா நிதி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று(05) கொழும்பு 10 ஹற்றன் நெஷனல் வங்கி தலைமையக கூட்ட மண்டபத்தில் கல்வியமைச்சின் செயலாளா் சுனில் ஹெட்டியராச்சி, ஜ.எல்.ஓ மற்றும் ஜக்கிய நாடுகள் அமையத்தின் கொழும்பு பிரநிதி சிம்ரின் சிங், ஜனாதிபதி அலுவலகத்தின் சூழலியல் கிராம சக்தி பணிப்பாளா் கலாநிதி உபாலி இந்திரசிறி, ஹற்றன் நெசனல் வங்கியின் பிரதிப் பொதுமுகாமையாளா் சிறிமதி குரே ஆகியோறும் கலந்து கொண்டு பாடசாலை மாணவா்களுக்கு 50ஆயிரம் ருபாவுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனா்.
வறுமை ஒழிப்பு, நிதி,திறன் அபிவிருத்தி, சிறந்த கல்வியியல், சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் கழிவுகள், மிண்சார சக்தி, சூழல்லியல், பாலியல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு நிகழ்வுகளை கதை சொல்லல், விடியோ, ஒளி, ஒலி போன்ற கருத்துக்களை இம் மாணவா்கள் பயிற்சிப்பட்டரையில் கலந்து தமது அறிவுகளை விருத்தி செய்யவுள்ளனா்.