(UPDATE) - தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்ய கோரி நகரில் மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல் போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டத்தை இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கட்சி சார்பாக தமது அரசாங்க தொழிலை துஷ்பிரயோகம் செய்வதாக இ.தொ.காவின் ஆதரவாளர்கள் கொடுத்த புகாருக்கு அமைவாகவே இந்த வீதி மறியல் போராட்டம் 06.03.2018 அன்று மாலை 6 மணியளவில் சுமார் 2 மணி நேரமாக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், அட்டன் பொலிஸ் தலைமையகத்திலிருந்து பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மேல்மட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறிய உத்தரவாதத்திற்கு அமைவாக இந்த வீதி மறியல் போராட்டம் வாபஸ் பெற்று அணைவரும் கலைந்து சென்றனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -