ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மட்டக்குளி தாருள் தக்வா கல்வி நிலையத்தின் 2017ஆம் ஆண்டிற்கான குர்ஆன் மனனம் மற்றும் தஃலீமுல் குர்ஆன் மத்ரஸாக்களின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்வி நிலையத்தின் நிறுவனரும்,பணிப்பாளருமான அல்-ஹாபிஸ், அல்-ஹாரி எம்.இஸட்.எம்.யுஸ்ரி தலைமையில் கொழும்பு-02, பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.
நிகழ்வுகள் இரு பகுதிகளாக நடைபெற்றன. காலையில் தஃலீமுல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமல் சர்வதேச பாடசாலையின் அதிபர் முஹமட் ஷஸ்லியும், இரண்டாம் நிகழ்வு மாலை இடம் பெற்றது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் உறுப்பினர் மௌலவி ஏ.எம்.ஏ.அஸீஸ் (மிஸ்பாகி) கலந்து கொண்டிருந்தனர்.
நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும்ää சான்றிதழ்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர். இதன்போது மாணவர்களின் இஸ்லாமிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.