இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் INSTITUTE OF CERTIFIED MANAGEMENT ACCOUNTANTS SRI LANKA நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கற்கை நிலையமான DMK ASSOCIATES நிறுவனத்தினால் தொழில்சார் தகைமை கற்களை தொடர ஆர்வமுள்ள உயர்தர வர்த்தக கலைப்பிரிவு மாணவர்களை தேர்வு பரிட்சை மூலம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான கற்களை வழங்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும் இன்று கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான சமூக இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கலீல் எஸ் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் முறைகள் மற்றும் ஆலோசனை சேவையினை வழங்கி வைத்தார்.
மாணவர்கள் பாடசாலை காலத்தின்போதே போட்டிமிக்க தொழில் சந்தைக்கு தன்னை முழுமையாக தயார்படுத்தும் முறைமைகள், பண வீண்விரயம் இன்றி எமது பிராந்தியத்தில் காணப்படும் வளங்களை பயன்படுத்துதல், பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகள், தொழில் சார் கற்கை நெறிகள் மூலமான அடைவுகள், அதன் நன்மைகள், இலகு முறையில் குறுகிய காலத்தில் தொழில் கல்வியை பெறல், முயற்சியாண்மை, போன்ற பல்வேறுபட்ட தலைப்புகளில் இக் கருத்தரங்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் ஸாஹிறா கல்லூரி முதல்வர் எம். எஸ். முஹம்மட் தனது உரையில் இந்த கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி ஹிலால் அவர்களின் சேவையினை பாராட்டி பேசியதோடு தங்களது காலத்தில் தொழில் கல்வியை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு பல தடைகளை தாண்டி சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
ஆனால் இப்போது உங்கள் காலடியில் இவ்வாறான கல்விச்சேவையினை DMK ASSOCIATES நிறுவனம் கொண்டுவந்திருப்பதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்களை வேண்டிக்கொண்டார்.
கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வின்போதே இடம்பெற்ற போட்டிப் பரிட்சை மூலம் அதி கூடிய புள்ளிகளை பெற்ற முதல் இருபது மாணவர்களுக்கு CMA அல்லது AAT கற்கைகளுக்கு விரிவுரைகளை தொடர இப்புலமை பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
வளவாளராக கலந்துகொண்ட கலாநிதி ஹிலால் ஸாஹிறா கல்லூரி முதல்வர் எம். எஸ் முஹம்மட் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவவிக்கப்பட்டதுடன் நீதிக்கும் சமாதானத்துக்குமான சமூக இளைஞர் பேரவையின் செயலாளர் ஏ. எம். றோஸன் நிகழ்வுகளை நெறிப்படுத்தி வழங்கினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கணக்கய்வு உத்தியோகத்தர் எம். ஏ. பைசர், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஸாக்கிர் அஹமட், றுஸ்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்.