இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது பொது பட்டமளிப்பு விழா


லங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மணடபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான எல்லா ஏற்பாடுகளையும் பலகலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுவருகின்றது.

510 வெளிவாரி (External Degree) மற்றும் 19 முகாமைத்துவ முதுமாணி பட்டப்படிப்பு (MBA) துறைகளில் தமது பட்டப்படிப்பு நெறிகளைபூர்த்தி செய்த பட்டாதாரி மாணவர்கள் உட்பட மொத்தம் 950 பேர் இவ்வருடம் தமது பட்டங்களைப்பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா மூன்று கட்டங்களாக நடைபெறும்.
பட்டமளிப்புக்கான சீருடையையும், பட்டமளிப்பு மாலையையும் அனுமதிச்சீட்டினையும் எதிர்வரும் 17 ம் திகதி (மார்ச்) தென்கிழக்குப்பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை பெற்றுக்கொள்ளலாமென பதிவாளர் அறிவிக்கின்றார். பட்டமளிப்பு ஊர்வலம் அன்று (ஏப்ரல் முதலாம் திகதி) காலை 7.45 மணிக்கு ஆரம்பமகவுள்ளத்தால் சகல பட்டம் பெறும் மாணவர்களையும் அன்று காலை 7.30 மணிக்கு சமூகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவறும்பட்சத்தில் அவர்கள் எக்காரணத்தைக்க்கொண்டும் பட்டமளிப்பு ஊர்வலத்தில் சேர்த்துக்கொள்ளபடமாட்டர்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -