அப்பிரதேசங்களிற்கு சென்ற இராணுவ தளபதி மல்வத்து மகாநாயக சுவாமிவஹன்ஷ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன , மத்திய மாகாண ஆளுனர், மத்திய மாகாண முதலமைச்சர், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி , 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் மலைநாட்டு மௌவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் கடந்த தினங்களில் கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை இராணுவ தளபதியின் பங்களிப்புடன் பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிஷ்சங்க ரணவக மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் ஆகியோர் பங்களிப்புடன் இடம்பெற்றது.
பின்னர் இராணுவ தளபதி , கண்டி பள்ளிவாசலின் மௌவி மற்றும் அப்பிரதேச முஸ்லீம் மக்களை சந்தித்து உரையாடினார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளிற்கோ சேதம் ஏற்படாதவாறு இலங்கை இராணுவத்தினர் கடமைகளை மேற்கொள்ளுவார்கள் என்று இராணுவ தளபதி அப்பிரதேச வாழ்மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இராணுவ தளபதி மற்றும் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த சம்பவத்தின் போது சேதமாக்கப்பட்ட கட்டிடங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் சீர்திருத்தி மீள நிர்மானித்து தருவதாக இராணுவ தளபதி இதன்போது கூறினார்.
கலவரம் நிமித்தம் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியிருக்கும் பொது மக்களையும் இராணுவ தளபதி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் உரையாடினார்.