ந‌ம‌க்கான‌ ஊட‌க‌ங்க‌ள் வேண்டும் என‌ சில‌ர் இப்போது சொல்ல‌ ஆர‌ம்பித்துள்ளார்க‌ள். அடிக்க‌டி முஸ்லிம் ச‌மூக‌ம் இப்ப‌டித்தான் சோடாப்போத்த‌ல்க‌ளாக‌ உள்ள‌து.


முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி. 
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்- ந‌ம‌க்கான‌ ஊட‌க‌ம் இல்லையா? நிச்ச‌ய‌ம் உண்டு. ஆனால் அவ‌ற்றை ப‌ண‌ம் கொடுத்து வாங்குவோர் ந‌ம‌க்குள் உண்டா என்ப‌துதான் இன்று சிந்திக்க‌ வேண்டிய‌ விட‌ய‌ம்.

ந‌ம‌க்கான‌ ஊட‌க‌மாக‌ ந‌வ‌ம‌ணி, மீள் பார்வை, அல்ஜ‌ஸீறா என‌ ப‌த்திரிகைக‌ள் உள்ள‌ன‌. நாட்டில் உள்ள‌ 10 ல‌ட்ச‌ முஸ்லிம்க‌ளில் எத்த‌னை பேர் மேற்ப‌டி ப‌த்திரிகைக‌ளை ப‌ண‌ம் கொடுத்து ப‌டிக்கிறீர்க‌ள் என‌ சொல்ல‌ முடியுமா? எத்த‌னை முஸ்லிம் வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தாமாக‌ முன்வ‌ந்து இந்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு நிதியுத‌வி அல்ல‌து விள‌ம்ப‌ர‌ம் கொடுத்தார்க‌ள் என‌ காட்ட‌ முடியுமா?

அது ம‌ட்டும‌ல்ல‌. த‌ற்போதைய‌ ந‌வீன‌ யுக‌த்தில் ப‌ல‌ முக‌ நூல் டி வீக்க‌ள் இய‌ங்குகின்ற‌ன‌. வியூக‌ம் டி. வி. அல்ஜ‌ஸீறா ல‌ங்கா டிவி என‌ முஸ்லிம்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இவ‌ற்றை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன் வ‌ரும் ஒரு முஸ்லிம் உள்ளானா? ஒரு வ‌ர்த்த‌க‌ர் உண்டா?

அதே போல் ஜ‌ப்னா முஸ்லிம், ம‌ட‌வ‌ளை நியூஸ் மற்றும் இம்போர்ட் மிரர் போன்ற‌ ஊட‌க‌ங்க‌ள் இந்த‌ க‌ல‌வ‌ர‌ கால‌த்தில் தைரிய‌மாக‌ செய‌ற்ப‌ட்ட‌ன‌. இந்த‌ ஊட‌க‌ங்க‌ள் ம‌ல‌க்குக‌ளால் நிர்வ‌கிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வா? இல்லை. ந‌ம்மைப்போன்ற‌ ம‌னித‌ர்க‌ளால் ச‌மூக‌த்துக்காக‌ என‌ தியாக‌த்துட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. அந்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு சுய‌மாக‌ ஒரு தொகை ப‌ண‌த்தை உத‌வியாக‌ அனுப்பிய‌ ஒரு முஸ்லிம் வ‌ர்த்த‌க‌ரை காட்ட‌ முடியுமா? அல்ல‌து ந‌ம‌க்கென‌ ஊட‌க‌ம் வேண்டும் என‌ எழுதுவோராவ‌து ப‌ண‌ம் சேக‌ரித்து அனுப்பிய‌துண்டா?
காத்தான்குடியில் ஒரு த‌னி ம‌னித‌ர் வார‌ உரை க‌ல் என்ற‌ ப‌த்திரிகையை வெளியிடுகிறார். இப்ப‌த்திரிகைக்கு உத‌வி செய்த‌ காத்தான் குடி வ‌ர்த்த‌க‌ர்க‌ள் எத்த‌னை பேர் என‌ காட்ட‌ முடியுமா? ப‌த்திரிகை வெளியிட்டே ஒட்டாண்டியாய் போய் விட்டார் அவ‌ர். அவ‌ருக்கு இருக்கும் ஆர்வ‌ம் ஏன் அவ‌ர‌து ப‌த்திரிகையை தேடி வாங்கும் அள‌வு முஸ்லிம்க‌ளுக்கு வ‌ர‌வில்லை.

ஆக‌வே ந‌ம‌க்கென‌ ஊட‌க‌ங்க‌ள் உள்ள‌ன‌. இனித்தான் ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்ப‌தில்லை. இருக்கின்ற‌ ந‌ம் ஊட‌க‌ங்களை நாம் பொருளாதார‌ உத‌வி, அவ‌ற்றை முஸ்லிம்க‌ள் பாவிப்ப‌து போன்ற‌வை மூல‌ம் ப‌ல‌ப்ப‌டுத்தினால் நிச்ச‌ய‌ம் மேலும் ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் உருவாகும்.

இவ்வாறு ந‌ம் ம‌த்தியில் உள்க‌ ஊட‌க‌ங்க‌ளை வ‌ள‌ர்க்க‌ முன் வ‌ருவோர் யார் என்ப‌துதான் இன்றைய‌ கேள்வி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -