இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அதிகாரிகள் எம்மை சந்திப்பதில் இலங்கை அரசாங்கம் ஏன் கவலையடைகின்றது என்று எனக்குப் புரியவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கிறார்.
எமது அரசாங்கம் இந்தியாவுக்கெதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை. இராஜதந்திரம் என்பது கலையாகும். அது கலந்துரையாடல், ஈடுபாடு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்தே அமையும். இலங்கையுடனான நட்பில் இந்தியா, சீனா என்ற விவகாரத்தை கைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக் ஷ இந்தியாவின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
கேள்வி: இந்தியாவின் கரிசனை உங்களது அணுகுமுறையை மாற்றுவதற்கு தலைமை வகித்ததா?
பதில்: எங்களுக்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திடம் சிறந்த புரிந்துணர்வு இருந்தது. அது அரசபணி ரீதியாகவே இருந்தது. புலிகளைத் தோற்கடிப்பதில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெற எம்மால் முடிந்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அரச அதிகாரிகள் இலங்கையை அப்போது வித்தியாசமான வழியில் பார்த்தனர். அதாவது நிலைமையை உரியமுறையில் புரிந்துகொள்ளாமல் இவ்வாறு செயற்பட்டனர்.
விசேடமாக இலங்கைக்கு வந்த நீர்முழ்கிக் கப்பலின் உண்மைநிலை தொடர்பில் தெரியாமல் இருந்தனர். இதில் இந்திய ஊடகங்கள் முக்கிய வகிபாகத்தை வகித்தன. எவ்வாறெனினும் இந்திய அரச அதிகாரிகள் இது தொடர்பில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதுமட்டுமன்றி இந்தியா, இலங்கைக்கெதிராக செயற்படுவதாக இலங்கையின் சில தேசப்பற்றாளர்களும் செயற்பட்டு வந்தனர். இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்க இந்திரா காந்தி ஆதரவளித்தார்.
அச் செயற்பாடு இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வை உருவாக்கியது. இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா அநாவசிய தலையீடுகளை மேற்கொள்வதாக இலங்கை மக்கள் உணர்ந்தனர். கடந்த அரசாங்க மாற்றத்திலும் இவ் விடயம் உணரப்பட்டது. இந் நிலைமை தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆழமாக பார்க்க வேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக் கூடாது.
கேள்வி: நீங்கள் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கின்றீர்களா?
பதில்: இல்லை. அவர்கள் எம்முடன் பேசுவதில்லை. (சிரிக்கிறார்) அதுதான் இங்கு பிரச்சினையாக இருக்கிறது. எமது ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியினரை இராஜதந்திரிகள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது. அது வழமையாக இருந்தது. இராஜதந்திரிகள் மட்டுமன்றி இந்தியாவிலிருந்து வருகின்ற அனைவரும் அப்போது இலங்கையின் எதிர்க்கட்சித் தரப்பினரை சந்தித்தனர். ஆனால் தற்போது இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கூட எம்மை சந்திக்கத் தயங்குகிறார். இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அதிகாரிகள் எம்மை சந்திப்பதில் இலங்கை அரசாங்கம் ஏன் கவலையடைகின்றது என்று எனக்குப் புரியவில்லை.
கேள்வி: யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமாதானம் தற்போது கிடைத்திருக்கிறதா?-
பதில்: 30 வருடங்களாக யுத்தம் நீடித்தது. யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் அபிவிருத்திகளே புலிகளைத் தோற்கடித்ததை விட மிகப் பெரிய வெற்றியாகக் காணப்பட்டன. ஆனால் அதனை சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாம் பாரிய சாதனைகளை அடைந்தோம். உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி அரசியல் சாதனைகளையும் படைத்தோம். மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு வரை வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவில்லை. கருணா அம்மான் மற்றும் ஈ.பி.டி.பி. தரப்பினர் போன்றோர் புலிகளிடமிருந்து ஆரம்பத்திலேயே விலகிவிட்டனர். தேர்தலுக்கு முன்னர் நாம் அவர்களிடம் ஆயுதங்களைக் களைந்தோம்.
அதன் பின்னரே வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினோம். அவ்வாறு செய்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவும் ஜனாதிபதியாக நீடித்திருக்கலாம். ஆனால் நாங்கள் நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்தினோம். நாம் வடமாகாண சபைத் தேர்தலில் தோற்கப்போகிறோம் என தெரிந்துகொண்டும் வடக்கு மக்கள் அவர்களுக்குத் தேவையானவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தோம். 2013 ஆம் ஆண்டு முடிவில் அதிகளவான வீடுகளும் காணிகளும் விடுவிக்கப்பட்டன.
பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வீதிகள், ரயில் தண்டவாளங்கள், மின்சாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எம்மிடம் சரணடைந்த பயங்கரவாதிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்தோம். 30 வருட யுத்தத்துக்குப் பின்னர் ஒரே இரவில் சமாதானத்தை அடைய முடியாது. அந்தத் தத்துவங்களை முன்வைக்கும் மக்கள் தொடர்ந்து இருந்தனர். காயங்கள் ஆற்றப்படுவதாக நான் கூறவில்லை. காரணம் கடந்த 3 வருடங்களாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் அரசியல் சுதந்திரம் குறித்துப் பேசுவதற்கு முன்னர் பொருளாதார சுதந்திரத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே முக்கியமானது என நான் கருதுகின்றேன். ஆனால் அவர்கள் அதிகாரப் பகிர்வு குறித்து மட்டுமே பேசுகின்றனர். அது இரண்டாம் பட்சமாகும். மக்களுக்கு உணவு, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் ஆர்வத்தை இச் செயற்பாட்டுக்கு அப்பால் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
கேள்வி: நீங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் இவ் விடயங்களுக்கா முக்கியத்துவம் அளிப்பீர்கள்?
பதில்: ஆம். நாம் என்ன செய்துகொண்டிருந்தோமோ அதனையே தொடர்வோம். நாட்டின் அனைத்து மக்களையும் போன்று வடக்கு, கிழக்கு மக்களும் சமமானவர்கள் என்பதை உணரும் வகையில் சந்தர்ப்பங்களை பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
கேள்வி: உங்கள் இரு சகோதரர்களைப் பற்றி கூறமுடியுமா? பசில் ராஜபக் ஷ, மஹிந்தவின் ஆலோசகராக செயற்பட்டார். நீங்கள் அவர்களுடன் அடிக்கடி பேசுவீர்களா?
பதில்: நாம் எப்போதுமே ஒரு அணியாகவே வேலை செய்கின்றோம். (சிரிக்கிறார்) நாம் நாட்ைடப் பற்றியே சிந்திக்கின்றோம். ஆனால் அடிக்கடி பேசக் கிடைப்பதில்லை. யுத்தத்தின்போது தொடர்ச்சியாகவே இணைப்பில் இருந்தோம். இவ் ஒற்றுமை எம்மிடம் ஆரம்பத்திலிருந்தே வந்தது. ஒற்றுமை எப்போதுமே பலமானது. அதைத்தான் எமது தந்தை எமக்கு கற்பித்தார். நாம் இனரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிந்தால் வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டில் அழுத்தம் பிரயோகிப்பார்கள். எனவே ஒற்றுமை பற்றியே நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும்.
கேள்வி: உங்கள் கரங்கள் கறைபடிந்துள்ளதாக பலர் கூறுகின்றனர். யுத்தத்தின்போது ஒரு பாதுகாப்பு செயலாளராக இருந்து நீங்கள் புலிகளை தோற்கடித்த போது ஆயிரக்கணக்கான மக்களை கொன்றமை குறித்து குற்றஞ்சாட்டப்படுகிறது. இக் குற்றச்சாட்டுக்களுக்கு உங்கள் பதில் என்ன? அத்துடன் இவ் யுத்தம் உங்கள் தனிப்பட்ட வாழ்வை எவ்வாறு பாதித்தது? யுத்தத்தின்போது தூக்கமற்ற இரவுகளை சந்தித்தீர்களா?
பதில்: நான் தவறு ஏதும் செய்யவில்லை. சரியானதையே செய்தேன் என்று எனக்குத் தெரியும். எனது மனசாட்சி அதனைக் கூறுகிறது. சிவிலியன்கள் கொலை தொடர்பில் நீங்கள் கேட்கும்போது யுத்தம் என்பது இலகுவானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது இலங்கையோ இந்தியாவோ பாகிஸ்தானோ ஏன் ஈராக்காகவோ கூட இருக்கலாம். யுத்தம் என்பது நல்ல விடயமல்ல. ஆனால் இலங்கையில் நான் யுத்தத்தை உருவாக்கவில்லை. மாறாக நான் யுத்தத்தை முடித்தேன். யுத்தம் இருப்பதை விட அதனை முடிப்பது மேன்மையானது. புலிகளில்லாமல் எமது நாடு ஒரு சிறந்த இடத்திலிருக்கிறது. இன்று இலங்கை ஜனாதிபதியால் எங்கும் போகலாம். இராணுவ வீரர்கள் மட்டுமன்றி பயங்கரவாதம் காரணமாக சாதாரண மக்களும் உயிரிழந்தனர். யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை குண்டுகள் அடையாளம் காண்பதில்லை. யுத்தத்தின்போது நான் இரவில் நித்திரையடைந்திருக்கிறேன்.
கேள்வி:யுத்தத்தின் இறுதிக் கட்டடத்தில் யுத்தம் முடிவதற்கு முன்பாக புலிகளுடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடந்ததா? புலிகளின் தலைவர் தொடர்பு கொண்டாரா?
பதில்: புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது நேரத்தை வீணாக்கும் செயல் என்றே நான் கருதுகின்றேன். பிரபாகரன் என்னுடன் தொடர்புகொள்ள போதுமானவர் அல்ல. ஆனால் கே.பி.யைப் பாருங்கள். அவர் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதும் அது அவரின் இறுதிநேரமே என்று அவர் கருதினார். ஆனால் அவர் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றார். நாம் அவரின் கடந்த காலத்தையும் தவறுகளையும் புரிந்துகொள்ள முயற்சித்தோம். எனவே அவர் இயல்பான வாழ்வை வாழ்வதற்கு இடமளித்தோம். கே.பி.யை புனர்வாழ்வு செய்தமையானது சிறந்த விடயம். அதை நாம் இன்றும் நம்புகின்றோம்.
கேள்வி: யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா உதவியது. ஆனால் இலங்கை சீனாவுடன் நெருங்கி இந்தியாவை காட்டிக்கொடுத்ததாக உணர்வு வந்ததே?
பதில்: இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எமது அரசாங்கம் இந்தியாவுக்கெதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை. இராஜதந்திரம் என்பது கலையாகும். அது கலந்துரையாடல், ஈடுபாடு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்தே அமையும். இலங்கையுடனான நட்பில் இந்தியா, சீனா என்ற விவகாரத்தை கைவிட்டு வெளியே வரவேண்டும்.