காரைதீவு நிருபர்-
அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கரமிப்பு விவகாரம் ஏலவே திட்டமிட்ட செயல். இது தொடரக்கூடாது. அந்த அப்பாவி மக்களுக்கு இப்படி நடந்தமை கவலைக்குரியது. இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்ததார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
உடனடியாக அமைச்சர் மனோகணேசனிடம் முறையிட்டேன். அம்பாறை பிரதிப்பொலிஸ மாஅதிபரிடமும் முறையிட்டுள்ளேன். அங்கு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது அரசஊழியர்கள் தாக்கப்பட்டார்கள் என்குற்றசாட்டின்பேரில் 23தமிழ்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும்செய்திகேட்டு அதிர்ந்தேன்.
அந்த தமிழ்மக்களுக்கு உதவியாக ஆக காரைதீவு சிறில் தம்பியும் சட்டத்தரணி சிவரஞ்சித்தும் முழுநேரம் உழைத்துள்ளனர். அவர்களை பாராட்டுகின்றேன். அதற்குதவிய ஊடகவியலாளரையும் பாராட்டுகின்றேன்.