ஹிஜாஸ் மண்ணில் 'ஜாஸ்'
+++++++++++++++
Mohamed Nizous
ஹி'ஜாஸ்' என்ற
கீர்த்தி மிகு நிலப் பரப்பில்
'ஜாஸ்' என்ற
ஜாஹிலிய்யம் மிகைக்க
(வ)ஹி வாடி நிற்கிறது.
கலிமா தளைத்த
கண்ணிய மண்ணில்
சினிமா முளைத்து
சீறிப் பாய்கிறது.
மறம் கொண்ட உமர்கள்
திறன் காட்டிய மண்ணில்
ட்ரம் கண்டு நடுங்கி
கரம் கட்டி நிற்கிறார்கள்
மூணில் ரெண்டு பூமியை
முடியாண்ட பூமி
கூனி நிற்கிறது
தீனை விற்கிறது.
காதும் காதும் வைத்தாற்போல்
யூதம் செய்யும் சதியில்
வேதம் இறங்கிய மண்
சேதமாகிப் போகிறது.
ஆதியில் இருந்த
அறியாமைப் பழக்கங்கள்-மீள
ஊதிப் பெருக்கின்றன
உருக்குலைந்து போன
ச'ஊதி' அரசில்.
அமெரிக்காவில் படித்து
அரபு தேசம் ஆள்பவர்கள்
ஷரியா சட்டத்தை
சரியாகப் புரியாது
பண்பாட்டை அழித்து
fun பாட்டை நேசிக்கிறார்கள்
என்றாவது ஒருநாள்
இன்னுமொரு உமர்
எங்களை ஆள வருவார்.
அந்த நம்பிக்கையில்
அதுவரை
அமைதி காக்கிறது
அந்த மண்..!