அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டங்களில் கண்பார்வை குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சிறி ஏற்பாட்டில் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வுவொன்று 05.03.2018 அன்று அக்கரபத்தனை ஹோல்புறூக் வல்லவன் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தது.
இதில் விசேட வைத்திய நிபுனர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் மூக்கு கண்ணாடிகளும் பிரதேசத்தில் நடக்கமுடியாமல் இருந்த முதியோர்களுக்கும் சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான உதவிகளை கொழும்பு லயன்ஸ் கழகம் வழங்கியமை குறிப்பிடதக்கது. இதில் 500 இற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.