கண்டி,திகண பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மருதமுனையில் ஆர்ப்பாட்டம்.

பி.எம்.எம்.ஏ.காதர்-
ண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று(06-03-2018)மருதமுனையில் பூரண ஹர்த்தால்,கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்பன இடம்பெற்றது.
இன்று காலை மருதமுனை பிரதான வீதியில் ஒன்று திரண்ட மக்கள் வர்த்தக நிலையங்களை மூடி வீதியை மறித்து டையர் எரித்த இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.அரசே முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பள்ளிவாசல்களையும்,வர்த்தக நிலையங்களை உடைத்து தீவைத்து சேதப்படுத்தியோரைக் கைதுசெய் என்ற கோசங்களோடு மக்கள் இந்த ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

இந்த ஆரப்பாட்டம் காரணமாக கல்முனை,மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்கு வரத்துக்கள் தடைப்பட்டன.ஆர்ப்பாட்டக்காரர்களின் வட்புறுத்தல்கள் காரணமாக மருதமுனை பிரதேசப் பாடசாலைகள் 11 மணியளவில் கலைக்கப்பட்டது. கல்முனைப் பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போக்கு வரத்துக்கள் தடைப்பட்ட போதிலும் 12 மணியளவில் பொலிசாரும் இராணுவத்தினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -