புதிய தவிசாளர் ஜெயசிறில் உத்தியோகபூர்வமாக கடமைபொறுப்பேற்பு!

காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று பிரதேசசபைக்குச்சென்று தமது கடமையைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரை சபை வாகனம் சென்று அழைத்துவந்தது. வாகனத்தில் வந்திறங்கியதும் அவரை பிரதேசசபைச் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நிதிஉதவியாளர் முத்துலிங்கம் ரகுநந்தன் சிடீஓ. ஜௌபர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றார்கள்.

பின்னர் அவர் தனது உத்தியோகபூர்வ அறைக்குள் சென்று சம்பவத்திரட்டுப்புத்தகத்தில் பதிவினை மேற்கொண்டார்.
அத்துடன் சபையின் சகல பிரிவுகளுக்கும் சென்று சகல ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

முதல்நாள் பரிசாக கிழக்கிலிருந்து புதிதாக வெளிவரும் அரங்கம் பத்திரிகையினையும் சுவாமி விபுலாநந்தர் நாட்காட்டியையும் சகல ஊழியர்களுக்கும் வழங்கினார்.

அதேவேளை சபையின் உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் சபைக்கு வந்து தனது அறையில் தமது பதிவை மேற்கொண்டார். செயலாளர் அ.சுந்தரகுமாரும் உடனிருந்தார். உறுப்பினர் மு.காண்டீபனும் வருகைதந்திருந்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -