(வீடியோ)..முக நூலில் ஓட்டமாவடி ஹிஜ்றா பாடசாலையின் அதிபர் விமர்சிக்கபடுவது நயவஞ்சகத்தின் உச்ச நிலை.. பேசி இமாம் முஸ்தபாவுடன் உலமா அன்சார்




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
டந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊட்டற் பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபரும், ஆசிரியர்களும் சமூகத்துடன் தொடர்பற்ற நபரினால் அவருடைய சொந்த முகநூலில் தாந்தோன்றித்தனமாக விமர்சிக்கபடுவதானது அவருடைய நயவஞ்சகத்தனத்தின் உச்ச கட்ட நிலையினை எடுத்துக்காட்டுவாதாக இருக்கின்றது என ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் பேசி இமாம் அல்-ஹாஜ் ஏ.பி.எம்.முஸ்தபா மெளலவி மற்றும் முன்னாள் பாடாசலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் மெளலவி அல்-ஹாஜ் ஏ.எம்.அன்சார் ஆகியோர் கல்குடா மத்தி கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஐ.அஹ்ஷாப் முன்னிலையில் ஒட்டு மொத்த ஹிஜ்றா பாடசாலையில் பெற்றோர் அடங்களாக தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்க பொது சபை கூட்டமானது நேற்று 27.03.2018 புதன் கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் செய்னம்பூ ஹமீட் தலைமையில் இடம் பெற்ற பொழுதே பாடாசலை சமூகம் மட்டுமல்லாது கல்குடா சமூகத்துடன் எதுவித தொடர்பும் அற்ற நிலையில் பல வருடங்கங்களாக கொழும்பில் வாழ்கை நடாத்திவரும் நபரினால் தாந்தோன்றித்தனமாக ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊட்டற் பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபரும், ஆசிரியர் குலாமும் குறித்த நபருடைய முகநூலில் விமர்சிக்கபடுவதற்கு எதிராகவே மேற் கண்டவாறு தமது எதிர்ப்பினை பாடசாலையின் அபிவிருத்தி சங்க நிருவாகிகள் என்ற ரீதியில் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த பாடசலையின் புதிய 2018ம் ஆண்டுக்கான அபிவிருத்தி சங்க நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதோடு புதிய செயலாளராக ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் பேசி இமாம் ஏ.பி.எம்.முஸ்தபா ஏகமானதாக எதுவித மாற்று கத்துக்களுக்கப்பால் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் சமூகத்துடன் எந்த தொடர்பும் அற்ற நபராக இருக்கின்ற குறித்த நபரானவர், பாடசாலை அமைந்துள்ள மூன்றாம் வட்டரத்தில் பிறந்தும் பாடசாலையின் முக்கிய பிரச்சனையாக காணப்பட்ட காணிக்கொள்வனவிற்கு ஒரு சதமேனும் வழங்கிடாத ஒருவர் என்ற வகையில் இவ்வாறு உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபரையும், பாடசாலையின் ஆசிரியர்களையும், நிருவகாத்தினையும் விமர்சிப்பதானை இட்டு அல்லாஹ்வை பயந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்ட அதே இடத்தில் குறித்த நபர் திட்டமிட்டு இவ்வாறான விமர்சனங்களை மேற்கொண்டு பாடசாலை நிருவாகத்தினை பெற்றோர்களிடமிருந்து ஓரங்கட்ட செய்வதானது அவருடைய நயவஞ்சகத்தின் உச்ச நிலை என பேசி இமாம் மெளலவி முஸ்தபாவும் முன்னாள் செயலாளர் மெளலவி அன்சாரும் தெர்வித்தனர்.

பாடசாலையின் அதிபர் அல்லது ஆசிரியர் குலாமோ ஏதாவது தவறு விட்டிருப்பார்களாயின் பாடசாலையின் நிருவாகத்துடனோ அல்லது உரிய அதிகாரிகளுடனோ தொடர்பு கொண்டு தீர்மானத்திற்கு வருவதே எல்லோராலும் ஏற்றுகொள்ளப்படும் முறையாகும். அதற்கு மாறாக எனக்குத்தான் எல்லாம் தெரியும் அல்லது என்னை விட அறிவாளி எவரும் இல்லை என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் தனக்கு விரும்பியவாறு விமர்சிக்கும் பொழுது ஆசியர் குலாமும் அதிபரும் உள ரீதியாக பாதிக்கப்படுவார்கள். இதானல் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த எமது மாணவ செல்வங்களாலும். உண்மையில் இவ்வாறான விடயமானது சாதரணமாக வாழக்கூடிய மனிதனுக்கு உகந்த விடயமாகவோ அல்லது சமூகத்தால் ஏற்றுக்கொள்ள கூடிய விடயமாகவோ அமையாது என மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவி கல்வி பணிப்பளர் எம்.ஐ.அஷ்ஷாப் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் குறித்த சமூகத்துடன் எதுவித தொடர்பும் அற்ற நயவஞ்க நபரின் தொடர்ந்தேர்ச்சியான இவ்வாறான விமர்சானங்கள் பாடசாலை நிருவாகத்தினை உள ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகின்றமையினால் அதற்கான தீர்வினை பெற்றுகொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் உடனடியாக குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் செயலாளர் அன்சார் மெளலவி மற்றும் புதிய செயலாளரும் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளி வாயலின் பேசி இமாமுமான முஸ்தபா மெளலவி ஆகியோர் உதவி கல்வி பணிப்பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஷாப் முன்னிலையில் வேண்டிக்கொண்டனர்.

ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தின் புதிய பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாக சபையின் தெரிவுடன் சமூகத்துடன் தொடர்பற்ற குறித்த நபருக்கு எதிராக ஒட்டு மொத்த பெற்றோர்கள் முன்னிலையில் உலமாக்கள் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் அஹ்ஷாப் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ :- பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வு -

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -